இந்திய வரலாற்றுக் காங்கிரசு
intiya varalāṟṟuk kāṅkiracu
இந்திய வரலாற்றுக் காங்கிரசு தற்கால இந்திய வரலாற்றை ஆராய்வதற்காக 1938-ல் நிறுவப்பெற்றது.
இந்திய வரலாற்றுக் காங்கிரசு தற்கால இந்திய வரலாற்றை ஆராய்வதற்காக 1938-ல் நிறுவப்பெற்றது. தொடக்கக் காலமுதல் இக் காலம் வரையுள்ள இந்திய வரலாற்றை ஆராய்வதென்று பின்னர் முடிவு செய்யப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை எந்தப் பல்கலைக் கழகம் அழைக்கின்றதோ அங்குக் கூடும். அப்போது வரலாற்றுப் புலவர்கள் இந்திய வரலாற்றுப் பகுதிகளைப் பற்றிய பிரச்சினைகளை விவாதிப்பர். கூட்டத்தின் நடவடிக்கைகள் அச்சிட்டு வெளியிடப்படும். இந்திய வரலாற்றை விரிவாக எழுதி 13 தொகுதிகளாக வெளியீடும் பணியைச் செய்து வருகிறது. இக்காங்கிரசின் தலைமை அலுவலகம் ஆண்டுதோறும் மாறும். ஆண்டுச் சந்தா பத்து ரூபாய் தருவோர் உறுப்பினராகலாம். இந்திய வரலாற்று அறிஞர்களுள் பெரும்பாலோர் உறுப்பினராயுள்ளனர்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 627)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pqt89a26/
தமிழ்“இந்திய வரலாற்றுக் காங்கிரசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pqt89a26/APA
Oliyon Research. (2026). இந்திய வரலாற்றுக் காங்கிரசு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pqt89a26/MLA
"இந்திய வரலாற்றுக் காங்கிரசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pqt89a26/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment