ஆதித்த சோழன்
ātitta cōḻaṉ
ஆதித்த சோழன் (கி.பி. 871-907): இவன் விசயாலயன் மகன்.
ஆதித்த சோழன் (கி.பி. 871-907): இவன் விசயாலயன் மகன். இராசகேசரி வர்மன் என்னும் பட்டமுடையவன். கோதண்டராமன் என்னும் பெயருமுண்டெனத் தெரிகிறது. இவன் பல்லவ மன்னன் அபராஜித வர்மனை வென்றான். கொங்கு நாட்டைக் கைப்பற்றினான். இவனுடன் சேரமான் தாணுரவி என்னும் சேர மன்னன் நட்பினன் என்றும், இவ்விருவரும் விக்கியண்ணன் என்ற ஒருவனுக்குச் 'செம்பியன் தமிழவேள்' என்னும் பட்டம் நல்கிச் சிறப்புப் பல செய்தனரென்றும் தெரிகின்றது. மற்றும் கங்கநாட்டு மன்னனான இரண்டாம் பிருதிவீபதி என்பானும் இவன் நட்பினன். திருப்புறம்பயம் முதலான இடங்களிற் சிவபெருமானுக்குக் கோயில் எடுப்பித்திருக்கிறான்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 419)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pqcywr76/
தமிழ்“ஆதித்த சோழன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pqcywr76/APA
Oliyon Research. (2026). ஆதித்த சோழன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pqcywr76/MLA
"ஆதித்த சோழன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pqcywr76/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment