உம்பற்காட்டு இளங்கண்ணனார்
umpaṟkāṭṭu iḷaṅkaṇṇaṉār
சங்கப் புலவர்களில் ஒருவர்.
சங்கப் புலவர்களில் ஒருவர். இவர் பாடியதாக ஓரு பாடல் அகநானூற்றில் (264) தொகுக்கப் பெற்றுள்ளது. இப்பாடல் முல்லைத் திணையைச் சார்ந்தது. பருவம் கண்டு வருந்திய தலைவி கூற்று எனவும், தோழி தலைவிக்குக் கூறியது எனவும் இரு கிளவிகள் இப்பாடலுக்கு வழங்கப் பெற்றுள்ளன. பதினைந்து அடிகளையுடைய இப்பாடலின் முதற்பகுதி (பத்து அடிகள்) கூதிர்க்கால வருணனையை அழகுற வழங்குகிறது. வானத்தில் விண்மீன்கள் அழகு செய்வது போல முசுண்டையின் வெண்மலர்கள் மலர்கின்றன. கோடலின் வெண்மலர்களைத் தலையிற் சூடிய கோவலர், பகலிற்பெய்த மழையில் நனைந்து வருந்திய ஆனிரைகளொடு நீர் சொட்டும் தலைமாலையுடன் ஊரை நோக்கிச் செல்கின்றனர். மழை பொழிந்து எழுந்த நீர் தெருக்கள்தொறும் ஓடுகிறது. இடி முழங்குகிறது. இத்தகைய கூதிர்க் காலத்தில் பாசறையிலிருக்கும் ‘காதலர் நம்நிலை அறியாராயினும் தம் நிலை அறிந்தனர் கொல்லோ’ என்ற வினாவின் வாயிலாகத் தனது உள்ளத்துணர்வைப் புலப்படுத்துகிறாள் தலைவி.
தலைவன் பாசறைப் புலம்பினமை கூறக் கேட்ட தலைவி கூற்றாக இப்பாடலைக் கொண்டுள்ளார் நச்சினார்க்கினியர் (தொல். அகத்திணையியல் – நச்: உரைமேற்கோள் 44). எஸ்.கு.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 928)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ppy9qh6v/
தமிழ்“உம்பற்காட்டு இளங்கண்ணனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ppy9qh6v/APA
Oliyon Research. (2026). உம்பற்காட்டு இளங்கண்ணனார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ppy9qh6v/MLA
"உம்பற்காட்டு இளங்கண்ணனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ppy9qh6v/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment