ஆர்த்தாசர்சிஸ்
ārttācarcis
ஆர்த்தாசர்சிஸ் : இப்பெயர் 'அர்த்த க்ஷத்ர' என்பதன் சிதைவு.
ஆர்த்தாசர்சிஸ் : இப்பெயர் 'அர்த்த க்ஷத்ர' என்பதன் சிதைவு. இப்பெயருள்ள பல பாரசீக மன்னர்கள் இருந்திருக்கின்றனர்.
ஆர்த்தாசர்சிஸ் I
கி. மு. 460 -ல் தந்தை சர்சிஸுக்குப் பின் பாரசீக மன்னனானான் ; பாக்டிரியாவிலும் எகிப்திலும் கலகங்களை யடக்கினான். இவன் காலத்தில் அதீனியர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கைப் படி அயோனிய நகரங்களையும் திரேசையும் பாரசீகம் இழந்துவிட்டது. இவன் 40 ஆண்டுகள் ஆண்டான்.
ஆர்த்தாசர்சிஸ் II
தந்தையான II-ம் டரையசுக்குப் பின் கி.மு.404-ல் பட்டமெய்தினான். ஸ்பார்ட்டா நகரின்மீது நடத்திய போரில் ஆசியாவிலுள்ள கிரேக்க நகரங்களையும் சைப்ரசையும் திரும்பப் பெற்றான். இவன் கி.மு.359-ல் இறந்தான்.
ஆர்த்தாசர்சிஸ் III
மேற்கூறியவனுடைய மகன். கி.மு. 359-ல் பட்டமெய்தினான். ஆசியா மைனரிலும் பினீஷியாவிலும் உண்டான கலகங்களை யடக்கினான். ரோட்சு தீவைச் சேர்ந்த மென்டார் என்னும் சிறந்த வீரன் இவனுடைய படைத் தலைவன். இவ்வரசன் கொடியவன். இவனுடைய வேலையாளான பாகோஸ் என்பவன் இவனையும் இவன் மூத்த மக்களையும் கி. மு. 338-ல் நஞ்சூட்டிக் கொன்றுவிட்டான். பாரசீக மன்னர்கள் வெளி நாட்டிலிருந்து திரும்பி வரும்போது. அந்நாட்டு மகளிர்க்கு ஒவ்வொரு பொற்காசு அளிக்க வேண்டும் என்பது அவர்களுடைய ஒரு மரபு. III-ம் ஆர்த்தாசர்சிஸ் ஒரு முதிர்ந்த உலோபியாகையால் தன் வெளிநாட்டிலேயே வாழ்க்கையின் பெரும்பகுதியை கழித்தான் என்று ஒரு வரலாறு கூறுகிறது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 458)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pk9rw97r/
தமிழ்“ஆர்த்தாசர்சிஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pk9rw97r/APA
Oliyon Research. (2026). ஆர்த்தாசர்சிஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pk9rw97r/MLA
"ஆர்த்தாசர்சிஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pk9rw97r/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment