நெப்ட்டூனியம்
nepṭṭūṉiyam
தனிம மீள் வரிசை அட்டவணையில், அணு எண் 89 கொண்ட ஆக்ட்டீனியத்திலிருந்து அணு எண் 103 கொண்ட லாரன்சியம் வரையிலான பதினைந்து தனிமங்கள் ஆக்ட்டினைடுகள் எனப் படுகின்றன.
தனிம மீள் வரிசை அட்டவணையில், அணு எண் 89 கொண்ட ஆக்ட்டீனியத்திலிருந்து அணு எண் 103 கொண்ட லாரன்சியம் வரையிலான பதினைந்து தனிமங்கள் ஆக்ட்டினைடுகள் எனப் படுகின்றன. இத்தொகுப்பின் உட்பகுதியாக அணு எண் 92 கொண்ட யுரேனிய நீரைத் தொடர்வதான தனிமங்கள் யுரேனியம் கடந்த தனிமங்கள் (trausuranic elements) எனப் படும்.
யுரேனியம் வரையிலானவை மட்டுமே இயற்கையில் அமைந்த நிலையான தனிமங்கள். யுரேனியத்தை அடுத்துத் தொடர்பவை அனைத்தும் செயற்கைத் தனிமங்களே. அவ்வாறு, செயற்கை முறையில் முதன் முதலில் கண்டறியப் பட்டது அணு எண் 93 கொண்ட நெப்ட்டூனியம். விண்வெளியிலுள்ள யுரேனஸ் என்னும் கோளின் பெயரைச் சார்ந்து யுரேனியம் பெயரிடப் பட்டது. யுரேனல் கோளைக் கடந்து, நெப்ட்யூன் கோள் உள்ளது. அதைச் சார்ந்து, காரணப் பெயராக நெப்ட்டூனியம் அமைந்துள்ளது. இத்தனிமத்தின் குறியீடு Np. இதன் நிறை எண் 237.
அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் மாக்மில்லன், அபெல்சன் என்னும் இரு இயற்பியலார் யுரேனியத்தை நியூட்ரான் துகள்களால் தாக்கி, இப்புதிய தனிமத்தை 1940இல் உருவாக்கினர். ஆய்வக அளவில் நடை பெற்ற இம்முயற்சியைத் தொடர்ந்து, 1944இல் மாக்னுசன், லா சாபெல் என்னும் இருவர் எடையிடத் தக்க அளவில் நெப்ட்டூனியத்தைத் தயாரித்தனர். அணுக் கரு உலைகளில், யுரேனிய எரி பொருள் தனிமங்களில் நெப்ட்டூனியம்–237, புளுட்டோனியம்–239 ஆகிய ஐசோடோப்புகள் கலந்திருக்கின்றன. உரிய கரைப்பான்களைப் பயன் படுத்தி, அயனிப் பரிமாற்ற ரெசின் கொண்டு, இக்கலவையிலிருந்து நெப்ட்டூனியத்தைப் பிரித்தெடுக்கலாம்.
நெப்ட்டூனியத்தின் ஐசோடோப்புகள் கதிரியக்கப் பண்பு கொண்டவை. நிறை எண் 237 கொண்ட நெப்ட்டூனியம்–237 ஐசோடோப் ஆல்ஃபா கதிர்களை வெளியிட்டுச் சிதைகிறது. இதன் அரை ஆயுள் காலம் 2.14 X 10⁶ ஆண்டுகள் (தோராயமாக இரண்டு மில்லியன் ஆண்டுகள்). நெப்ட்டூனியம்–239 ஐசோடோப்பின் அரை ஆயுள் காலம் 2.35 நாள்கள். வேதிப் பண்புகளில் நெப்ட்டூனியம் யுரேனியத்தை ஒத்துள்ளது.
இத்தனிமத்தின் சேர்மங்களில் நெப்ட்டூனிய ஆக்சைடு குறிப்பிடத் தக்கது. அணுக் கட்டமைப்பில் நெப்ட்டூனிய ஆக்சைடு (NP₃0₃) யுரேனிய ஆக்சைடான UO₂ என்பதுடன் ஒத்திருக்கிறது. U₃O₈ போன்று, NP₃O₈ என்னும் ஆக்சைடும் கண்டறியப் பட்டுள்ளது. நெப்ட்டூனிய ஹைட்ராக்சைடு, ஓசோனுடன் வினைப் பட்டு, NPO₃, 2H₂O, NPO₃, H₂O ஆகிய நீரேறிய நெப்ட்டூனிய டிரை ஆக்சைடுகளைத் தருகிறது. இந்த வினையை 300°C வெப்ப நிலைக்கு மேல் நிகழ்த்தினால் கருமை நிற NP₂O₅ கிடைக்கிறது.
நெப்ட்டூனிய ஹாலைடுகள் கட்டமைப்பில் யுரேனிய ஹாலைடுகளை ஒத்துள்ளன. நெப்ட்டூனியம் டை ஆக்சைடுடன், ஹைட்ரஜன், ஹைட்ரஜன் புளுரைடு ஆகியவற்றைக் கலந்து வினைப் படுத்தினால், நெப்ட்டூனிய புளுரைடு கிடைக்கும்.
நெப்ட்டூனியச் சேர்மங்களை நீரிலிட்டுக் கரைத்தால், அத்தகைய நீர்க் கரைசல்களில் நெப்ட்டூனியம் +3, +4, +5 ஆகிய வெவ்வேறான ஆக்சிஜனேற்ற நிலைகளில் அமைகிறது. நீர்க் கரைசலில் காணப் படும் NP+5 அயனி பிறவற்றை விட, அதிக நிலைப்பு தன்மை கொண்டிருக்கிறது. [NpF₅], [NpF₇]2- போன்ற அணைவு அயனிகளிலும், Np+5நிலையைக் காணலாம்.
அண்மையில், நெப்ட்டூனியத்தின் கார்பைடுகள், பாஸ்பைடுகள், நைட்ரைடுகள், சிலிக்கேட்டுகள் ஆகியன தயாரிக்கப் பட்டுள்ளன. நெப்ட்டூனியம் அடங்கிய கரிம உலோகச் சேர்மங்களும் தற்போது கண்டறியப் பட்டுள்ளன. —௧. சேது துணை நூல். F. Albert Cotton and Geoffrey Wilkinson, Advanced Inorganic Chemistry, Third Edition, Wiley Eastern Ltd. New Delhi, 1993.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 174)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/phr2fwbk/
தமிழ்“நெப்ட்டூனியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/phr2fwbk/APA
Oliyon Research. (2026). நெப்ட்டூனியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/phr2fwbk/MLA
"நெப்ட்டூனியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/phr2fwbk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment