கொதிகலன்—நீர் உப்பான சிலிக்காவை நீராவியிலிருந்து நீக்குவதற்கு, நீராவியைச் சுருக்கியுடன் கழுவும் முறையைப் பயன்படுத்தலாம். நீராவிக் கழுவுதல். சுழலி மாசுபடுதலைத் தவிர்ப்பதற்காகச் சிலிக்காவின் கொதிகலன்—நீர்ச் செறிவைக் குறைவாக வைத்திருக்க இயலாது. ஆகையால், இவ்வகை மாசுபடுதலை நீக்குவதற்கு நீராவிக் கழுவுதல் முறை பயன்படும். இம்முறையில் சுமையேற்றப்பட்ட சிலிக்கா (silica-laden), சுருக்கி அல்லது ஊட்டு நீர் போன்ற ஒத்த தூய கழுவித் தூய்மைப்படுத்தக் கூடிய நீருடன் தொடர்பு கொள்ளுமாறு வைக்கப்படும். பின், தூய நீரிலிருந்து சிலிக்கா எடுக்கப்படும். நீராவி உருள் கலனைப் (drum) படத்தில் காணலாம். இந்த உருள் கலனில் மையத்திலிருந்து புற நோக்கிச் செல்லுகின்ற முதன்மை எந்திரப் பிரிப்பான்களும், தேய்த்துத் தூய்மையாக்கும் கருவிகளும் உள்ளன. முதன்மைப் பிரிப்பான்களிலிருந்து வெளியேறும் நீராவி, ஒரு நீராவிக் கழுவியை (steam washer) நோக்கிப் பாயும். இந்த நீராவிக் கழுவி உருள் கலனின் மேல் இருக்கும். கழுவி, உருள் கலனின் நீளத்திற்குச் சமமான ஒரு செவ்வகத் தூணைக் (column) கொண்டிருக்கும். துளைகளிடப்பட்ட தட்டின் (perforated plate) வழியே நீராவி செங்குத்தாக மேலே செல்லும். பின் ஒரு துருப் பிடிக்காத எஃகு கம்பி வலைக் கண் கட்டின் (pack) வழியே சென்று, பின் மற்றொரு துளைகளிடப்பட்ட தட்டின் வழியே செல்லும். இறுதியாக, நெளிவுள்ள தேய்த்துத் தூய்மை யாக்கும் பொருளினூடே செல்லும் கழுவு நீர், குழாய் முனை வழியே உருள் கலனில் நுழைந்து, பிறகு கீழ் நோக்கிக் கழுவி வழியே, நீராவிக்கு எதிர்த் திசையில் பாயும். துளைகளிடப்பட்ட தட்டின் வழியே செல்லும் நீராவியின் திசை வேகம், ஒவ்வொரு தட்டின் மேலும் ஒரு கழுவு நீர் அடுக்கை உண்டாக்கும். கம்பி வலைக் கண், நீராவிக்கும், கழுவு நீருக்கும் நெருங்கிய தொடர்பை உண்டாக்குவதற்காக மிகுதியான பரப்பளவைக் கொடுக்கும். —இரா, இந்து நூலோதி. Baumeister, A. Avallone, and Baumeister III, Marks' Standard Hand Book for Mechanical Engineers, Eighth Edition, McGraw-Hill Book Company. New York, 1978.