சிதறல் விளக்கப் படம்
citaṟal viḷakkap paṭam
இரண்டு மாறிகளுக்கு (variables) இடையே உள்ள ஒட்டுறவு அல்லது தொடர்பை (correlation) வரைபடத்தின் மூலம் அறிந்து கொள்ள உதவுவது சிதறல் விளக்கப் படம் (scatter diagram) எனப்படும்.
இரண்டு மாறிகளுக்கு (variables) இடையே உள்ள ஒட்டுறவு அல்லது தொடர்பை (correlation) வரைபடத்தின் மூலம் அறிந்து கொள்ள உதவுவது சிதறல் விளக்கப் படம் (scatter diagram) எனப்படும். ஒரு மாறியின் மதிப்புகளை X அச்சிலும், மற்றொரு மாறியின் மதிப்புகளை Y அச்சிலும் எடுத்துக் கொண்டு அமையும் அவற்றின் மதிப்புகளின் இணைகள் வரைபடத்தில் புள்ளிகளாக அமையும். எடுத்துக்காட்டாக, x, y என்பன குறிப்பிட்ட சில மாணவர்களின் உயரங்கள், எடைகள் என இருக்கலாம். படத்தில், புள்ளிகள் சிதறிக் கிடக்கும் தன்மை, மாறிகளுக்கிடையேயுள்ள உடன் தொடர்பை எடுத்துக் காட்டுகிறது.
சிதறல் விளக்கப் படத்தில், புள்ளிகள் இடமிருந்து வலப் புறமாகக் கீழிருந்து மேல் நோக்கிச் செல்லும் நேர்கோட்டில் அமையின், மாறிகளுக்கிடையேயுள்ள உடன் தொடர்பு, முழுமை நேரிடை உடன் தொடர்பு (perfect positive correlation) எனப்படும்.
ஒரு வட்டத்தின் ஆரம், அதிகரிக்க அதிகரிக்க, ஒரு குறிப்பிட்ட திட்டமான விகிதத்தில், அதனுடைய சுற்றளவு அல்லது பரப்பளவு அதிகரிக்கிறது.
புள்ளிகள் இடமிருந்து வலப்புறமாக, மேலிருந்து கீழ் நோக்கிச் செல்லும் நேர் கோட்டில் அமைந்தால் மாறிகளுக்கிடையே முழுமையான எதிரிடை உடன் தொடர்பு (perfect negative correlation) உள்ளது எனலாம். எடுத்துக்காட்டாக, வளிமங்களின் கொள்ளளவு அவற்றின் அழுத்தத்தின் தலைகீழ் விகிதத்தில் மாறுபடுகிறது.
வரைபடத்தில் புள்ளிகள் ஒரே நேர் கோட்டில் அமையாது, இடமிருந்து வலமாகக் கீழிருந்து மேல் நோக்கிச் செறிந்து காணப்படின், மாறிகளுக்கு இடையே அதிகமான நேரிடை உடன் தொடர்பு உள்ளது எனலாம். புள்ளிகள் ஒரே நேர் கோட்டில் இல்லாமல், இடமிருந்து வலமாக, மேலிருந்து கீழ் நோக்கிச் செறிந்து இருப்பின், மாறிகளுக்கிடையே அதிகமான எதிரிடை உடன் தொடர்பு உள்ளது எனலாம்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ---->
எந்த முறைக்கும் கட்டுப்படாமல், எந்தப் பாதையிலும் செல்லாமல், புள்ளிகள் வரைமுறையற்று படத்தில் நாற்புறமும் சிதறிக் கிடப்பின், மாறிகளுக்கிடையே முற்றிலும் தொடர்பு இல்லை எனலாம். குறிப்பிட்ட சில மாணவர்களின் எடைகள், அவர்கள் குறிப்பிட்ட பாடத்தில் பெறும் மதிப்பெண்கள் ஆகியவற்றை வரைபடத்தில் குறிக்கும் போது, அப்புள்ளிகள் வகையற்றுச் சிதறிக் கிடக்கும். எனவே, எடைக்கும், மதிப்பெண்ணுக்கும் தொடர்பு எதுவும் இல்லை.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> சிதறல் விளக்கப் படமே இரண்டு மாறிகளுக்கிடையேயுள்ள உடன் தொடர்பின் தன்மை மற்றும் அளவினை அறிந்து கொள்ள உதவும் எளிய வழியாகும்.இம்முறையில் கணக்கிடுவதற்கு வாய்ப்பாடுகள் தேவையில்லை. புள்ளிகள் சிதறியுள்ள விதத்தைக் கொண்டு, கருதுகோள் மூலமே உடன் தொடர்பை அறிந்து கொள்ள முடியும். எனவே, இதன் மூலம் உடன் தொடர்பின் அளவை நுணுக்கமாகக் கணக்கிட முடியாது. —எஸ். மாதவராமசாமி
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 229)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pat6vukw/
தமிழ்“சிதறல் விளக்கப் படம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pat6vukw/APA
Oliyon Research. (2026). சிதறல் விளக்கப் படம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pat6vukw/MLA
"சிதறல் விளக்கப் படம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pat6vukw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment