உமர் வலியுல்லாகு
umar valiyullāku
இசுலாமிய சமயத்தைச் சேர்ந்த இறைநேசச் செல்வருள் ஒருவர்.
இசுலாமிய சமயத்தைச் சேர்ந்த இறைநேசச் செல்வருள் ஒருவர். இவர் கி.பி. 1748–இல் காயல்பட்டினத்தில் பிறந்தார். இவர் தந்தை பெயர் அப்துல் காதிர்; தாயார் பெயர் பாத்திமா. இளமையிலேயே இசுலாமிய சமயக் கல்வியிலும், ஆன்மிக நெறியிலும் ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்த உமர் வலியுல்லாகு பிற்காலத்தில், இசுலாமிய இறைநேசச் செல்வர்களுள் குறிப்பிடத்தக்கவர் என்று பெருமையைப் பெற்றார்.
உமர் வலியுல்லாகுவின் ஆன்மிக குரு சையிது முகுசின் முகைபிலி ஆவார். தம் ஆன்மிகக் குருவின் விருப்பத்திற்கிணங்க, உமர் வலியுல்லாகு மதினா சென்று அங்கு ஐந்து ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றிய பின் தாயகம் திரும்பினார். ஆன்மிக நெறியில் புகழ் பெற்றவரான சையிது முகமது புகாரித் தங்கலின் தொடர்பால் உமர் வலியுல்லாகு மென்மேலும் மெய்ஞ்ஞான ஆன்மிக அறிவு பெற்றார். இசுலாமிய ஆன்மிக நெறியின் ஒரு படித்தரமான ‘விலாயத்’ என்னும் நிலையினை உமர் வலியுல்லாகு மண முடித்த பிற்காலத்தில் அடைந்தார்.
இரத்தினக் கற்கள் வணிகத்தினால் பெரும் பொருள் ஈட்டிய உமர் வலியுல்லாகு தம் செல்வங்களை எளியோருக்கு அளித்து இன்பம் பெற்றதுடன், சமுகாயத்தின் மேம்பாட்டிற்காகவும் அரும்பணியாற்றினார். அரபு மொழிப் பமிற்சியால் பல ஞானப் பாடல்களை அம்மொழியில் இயற்றியுள்- ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கன ‘ஞானப்புலம்பல்’, ‘இலாசி கம்து பக்கீனீ’ முதலானவையாகும். ஆன்மிக நெறியின் அடிப்படையில் இவர்தம் கவிதைகளை ‘மரிபா’ என்னும் மெய்ஞானப் படித்தரத்தின் உயர் புகழ்க் கவிதைகள் என்று கூறலாம். இவர் தம் 53–ஆம் வயதில், கி.பி. 1801–ஆம் ஆண்டு காலமானார். சி.ந.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 936)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p8y6umb5/
தமிழ்“உமர் வலியுல்லாகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/p8y6umb5/APA
Oliyon Research. (2026). உமர் வலியுல்லாகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p8y6umb5/MLA
"உமர் வலியுல்லாகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/p8y6umb5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment