ஓர் ஒளி கடத்தும் பொருள் வழியாக, ஒளி செலுத்தப் படும் போது, வெளிப் படும் கற்றையில் கட்ட வேறுபாடு (phase difference) ஏற்படுவதுண்டு. ஆனால், இக்கற்றையின் வீச்சு, படு கற்றையின் வீச்சிலிருந்தும் மாறுபடுவதில்லை. கண் மற்றும் அனைத்து ஒளி ஏற்பியின் மூலம் ஆற்றல் வேறுபாடுகளை அளவிட முடியுமே தவிர. கட்ட வேறுபாட்டை அளவிட முடியாது. ஆனால், மிக நுட்பமான பாக்டீரியம் போன்றவற்றை உருப் பெருக்க, கட்ட வேறுபாட்டினையும், ஆற்றல் வேறுபாடாக மாற்ற வேண்டும். கட்ட வேறுபாடு காட்டும் நுண்ணோக்கியினை (phase contrast microscope) அமைப்பதற்கான அடிப்படைக் கருத்தைச் செர்னிக் என்பார் விளக்கியுள்ளார். Y₁, Y₂ என்னும் இரு புள்ளிகளிலுள்ள ஒளி கட்ட வேறுபாடு கொண்டதாக, ஆனால், ஆற்றல் வேறுபாடற்றதாக அமையலாம். இந்நிலையில் ξ(Y₁), ξ(Y₂) என்பனவற்றைப் படத்தில் காட்டியுள்ளது போல் சம நீளங் கொண்ட A₁, B₁ மற்றும் A₂,B₂,என்னும் இரு திசையன்களால் (vectors) குறிக்கலாம். ஏதேனும் ஓர் ஒளியியல் கருவியின் மூலம் A₁B₁ திசையனை A₁C₁ + C₁B₁ எனவும் A₂B₂ திசையனை A₂C₂ + C₂B₂ <!---- இச்சமன்பாடு முன் வரியில் உள்ள சமன்பாட்டை ஒத்து நோக்கி சரி செய்யப் பட்டது. ----> எனவும் பிரிப்பதுடன், அவ்விரு திசையன்களினிடையே (அதாவது A₂B₁, C₁B₁ மற்றும் A₂B₂, C₂B₂) அலகுகள் கட்ட வேறுபாட்டினை ஏற்படுத்த வேண்டாம். இதனைத் திசையன் முறையில், ஏதேனும் ஒரு திசையினை, \frac {\pi}{2} அலகுகள் சுழற்றுவதற்குச் சமமாகக் கொள்ளலாம். பின்னர், இரண்டு இரட்டைத் திசையன்களையும் இணைக்கும் போது, A₁B₁' மற்றும் A₂B₂' என்னும் தொகு பயன்களைப் பெறலாம். ஆற்றலின் மதிப்பு, திசையன் நீளங்களின் இருமடிக்கு நேர் விகிதத்தில் அமைவதால், முன்னர் இருந்த கட்ட வேறுபாடு தவிர, ஆற்றல் வேறுபாடும் இருக்கும். கட்ட வேறுபாடு காட்டும் நுண்ணோக்கியின் அமைப்பு, படத்தில் காட்டப்பட்டுள்ளது. இதில் குவிப்பானுக்கும், பொருளருகு வில்லைக்குமிடையே, ஒளி கடத்தும் தட்டு அமைக்கப் பட்டுள்ளது. குவிப்பானின் முதல் குவியத் தளத்தில், ஒரு நேரான ஒளி செல்லும் இடைவெளி அமைந்துள்ளது. கட்டத் தட்டு, பொருளருகு வில்லையின் இரண்டாம் குவியத் தளத்தில் அமைக்கப் பட்டுள்ளது. இவ்விடைவெளியின் பரிமாற்றுப் புள்ளியில், சமமான இறக்கம் ஏற்படுகிறது. படத்தில் சுழி வரிசையிலுள்ள ஒளியின் பாதை காட்டப் பட்டுள்ளது. கட்டத் தட்டின் மென் பகுதியின் வழியாகப் புகுந்து செல்லும் ஒளியையும், தடித்த பகுதி வழிச்செல்லும் ஒளியையும், ஒளி படுகையில் முன்னது விரைவாக முன்னோக்கிச் செல்கிறது. இறக்கத்தின் தடிமன் t, கட்டத் தட்டின் ஒளி விலகலெண் μ எனில், சுழி வரிசையிலுள்ள ஒளியின் அதிகரிக்கப் பட்ட கட்ட வேறுபாடு \frac {2 \pi}{\lambda} \big( \mu - 1)t. இங்கு λ ஒளியின் அலை நீளத்தினைக் குறிக்கும். அதிகப் பயனுறு திறன் வேண்டுமாயின், இடைவெளியின் பிம்பம் கட்டத் தட்டின் இறக்கத்துடன் ஒன்றியிருக்க வேண்டும். இறுதிப் பிம்பம், கண்ணருகு கருவியின் முதல் குவியத் தளத்தில் அமைகிறது. —சிவ.சேதுராமன்