முதலீடு (Investment), சேமிப்பு (Savings), பணத்தின் தீர்மை விருப்பம் (Liquidity preference), பண அளிப்பு (Money supply) ஆகியவற்றின் செயற்பாட்டால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்களை இப்படிவம் விளக்க முற்படுகிறது. பொருளியல் அறிஞர்களான இக்சு (Hicks), ஆன்சன் (Hansen) ஆகிய இருவர், தொன்மைப் பொருளியல் கோட்பாட்டையும், கீன்சு (Keynes)வின் வட்டிக் கோட்பாட்டையும் ஆராய்ந்து, அவற்றின் தொடர்புகளையும் வேறுபாடுகளையும் பகுத்து, உருவாக்கிய ஒரு கருத்துக் கூட்டாக்கமே அய்.எசு–எல்.எம் படிவம் (IS–LM Model) ஆகும். இதன் மூலம் உறுதியான, போதிய அளவு விளக்கமான வட்டிக் கோட்பாடு ஒன்றும் உருவானது. அய்.எசு. வளைகோடு இவ்வளைகோடு சேமிப்பு–முதலீடு–வட்டிக் கோட்பாட்டின் மறு உருவமே. கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தில் (படம்.1) I என்ற நேர்கோடு முதலீட்டிற்கும் வட்டி வீதத்திற்கும் எதிரிடைத் தொடர்புள்ளதை விளக்கும் வகையில் மேலிருந்து கீழாகச் சரிந்து செல்கிறது. சேமிப்பிற்கும் வட்டி வீதத்திற்கும் நேரிடையாக உள்ள தொடர்பை SY வளை கோடுகள், கீழிருந்து மேலாகச் செல்வதன் மூலம் வினக்குகின்றன. வருமானம் கூடக் கூட சேமிப்பு வளைகோடு வலப்புறம் நோக்கி நகர்ந்து செல்கிறது. சேமிப்பையும் முதலீட்டையும் சமநிலைப்படுத்தும் வட்டி வீதம் குறைந்து செல்கிறது. படம் - 1 படம் - 2 படம்–2இல் வருமானம் (Y) ‘X’ அச்சிலும், அதற்கான வட்டி வீதம் ‘Y’ அச்சிலும் அளவிடப்பட்டுள்ளன. வருமானம் Y ஆக இருக்கும்போது, தொடர்புடைய சேமிப்பு வளைகோடு S Y ஆகவும், சேமிப்பையும் முதலீட்டையும் சமநிலைப்படுத்தும் வட்டி வீதம் r ஆகவும் உள்ளன. இதுபோன்றது, r, r, r, r என்ற வட்டி வீதங்களில் வருமான அளவு மாறுகிறது. வருமானம் கூடக் கூட வட்டி வீதம் குறைந்து கொண்டே செல்வதால் IS வளைகோடு கீழ்நோக்கிச் செல்கிறது. எல்.எம். வளைகோடு கீன்சின் நீர்மை விருப்ப வட்டிக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே வளைகோடு உருவாக்கப்படுகிறது. இக்கோட்பாட்டின்படி, பல வருமான அளவுகளில் நீர்மை விருப்ப வளைகோட்டுத் தொகுப்பு ஒன்றைப் பெற இயலும். அரசால் முடிவு செய்யப்பட்ட பண அளிப்போடு இவ்வளைகோடுகள் ஒன்றிணைந்து LM வளைகோட்டைத் தருகின்றன. இவ்வளைகோடு, வேறுபட்ட வருமான அளவுகளில் வட்டிவீதம் எவ்வகையில் அமைகிறதென்பதைப் புலப்படுத்துகிறது. இருப்பினும், நீர்மை விருப்ப வளைகோடுகள் மட்டுமே சரியான வட்டிவீத அளவைத் தெரிவிப்பதில்லை. படம் - 3 படம் - 5 படம் - 5 படம்–3, 4–இல் நீர்மை விருப்ப வளைகோட்டுத் தொகுப்பின் மூலம் LM வளைகோடு உருவாவதைக் காணலாம். வருமானம் உயர உயர நீர்மை விருப்ப வளைகோடு கீழிருந்து மேலாகச்செல்கிறது. ஆகவே பணத்தின் அளிப்பையும் தேவையையும் சமநிலைப்படுத்தும் வட்டிவீதம் உயர்கிறது. படம்–4இல் வட்டி வீதம் எவ்வாறு பல வருமான நிலைகளில் முடிவு செய்யப்படுகிறதென்பது விளக்கப்படுகிறது. இதில், IS வளைகோடும் LM வளைகோடும் வருமானம், வட்டிவீதம் ஆகிய இரு மாறிகளை (Variables)ச் சார்ந்தவை. படம்–5இல் வருமானமும் வட்டிவீதமும் IS, LM என்ற இரு வளைகோடுகளும் வெட்டிச் செல்லும் ‘E’ என்ற புள்ளியில் வரையறுக்கப்படுகின்றன. இங்குச் சமநிலை வட்டிவீதம் Or என்றும், வருமான அளவு OY; என்றும் முடிவு செய்யப்படுகின்றன. மேலும், இவ்விடத்திலேயே வருமானமும் வட்டிவீதமும் ஒன்றையொன்று சார்ந்து (1) முதலீடும் சேமிப்பும் சமநிலையடைகின்றன; (2) பணத்தின் தேவையும் அளிப்பும் சமநிலையடைகின்றன. இதில் LM வளைகோடு பணத்தை மாறாக் காரணியாகக் கொண்டு வரையப்பட்டிருப்பதைக் கருத்திற் கொள்ளுதல் இன்றியமையாததாகும். இவ்வகையில் ஒரு முடிவான வட்டிக்கோட்பாடென்பது கீழ் வரும் நான்கு கூறுகளை அடிப்படையாகக் கொண்டது. அவை. 1) முதலீட்டுத் தேவைச் சார்பு (Investment Demand Function). 2) சேமிப்புச் சார்பு (Savings Function or Consumption Function), 3) நீர்மை விருப்பச் சார்பு (Liquidity Preference Function), 4) பணத்தின் அளிப்பு (Supply of Money) என்பனவாம். ஆகவே, இக்சு, ஆன்சன் கருத்துப்படி, பணவியல், மற்றும் உண்மைக் காரணிகளாக உற்பத்தித் திறன் (Productivity), சிக்கனம் (Thrift) போன்றவையும், முழுவதும் பணவியல் காரணிகளான பணத்தின் தேவையும் (நீர்மை விருப்பம்), அளிப்பும் வட்டி வீதத்தை முடிவு செய்வதில் சிறப்புப் பங்கு வகிக்கின்றன. இக்காரணிகளில் ஏற்படும் எந்த ஒரு மாறுதலும் IS, LM வளைகோடுகளை மாற்றியமைப்பதுடன், வட்டிவீதம், வருமானம் ஆகியவற்றின் சம நிலையிலும் மாற்றங்களை நிகழ்த்தும். அய்.எசு.எல்.எம் படிவச் செயற்பாட்டில் அர சின் தலையீட்டால் தாக்கங்கள் பல நிகழலாம். அரசின் தலையீடு பணவாக்க முறையாலும் நிதிக் கொள்கை முறையாலும் ஏற்படும். சிறப்பாக, அரசு தன் செலவை உயர்த்தலாம் அல்லது குறைக்கலாம். அதைப்போலவே, பண அனிப்பையும் வரி வீதங்களையும் உயர்த்தவோ குறைக்கவோ செய்யலாம். அரசின் செலவுகள் உயரும் போது IS சார்பு வலப்புறம் நகர, சமநிலை வருமானமும் வட்டி வீதமும் உயரும், கூடுதலான வட்டி உயர்வினால் முதலீடு பாதிக்கப்பட்டுக் குறையத் தொடங்கும். இதன் விளைவாக ஊக வாணிகத்திற்கான (Speculation) பணத் தேவை குறையும். மாறாக, அரசின் செவவுகள் கட்டுப்படுத்தப்பட்டுக் குறைக்கப்பட்டால், இதற்கு நேர்மாறான விளைவு- கள் உண்டாகும். அரசின் வரிகள் உயர்வதால் மக்களின் வருமானம் குறைக்கப்படுகிறது. இதன் காரணமாக IS சார்பு, இடப்புறமாகக் கீழ் நோக்கி நகர, வட்டிவீதம், நுகர்வு, சேமிப்பு, பேரத்திற்கான பணத் தேவை ஆகியவை குறைகின்றன. முதலீட்டிற்கும் ஊக வாணிகத்திற்குமான பணத்தேவைகள் உயாகின்றன. வரிவீதம் குறைக்கப்படும்போது, தெற்கு நேர்மாறான விளைவுகள் ஏற்படும். கீழே கொடுக்கப்பட்டுள்ள படம்–6 இக்கருத்துகளை மிகத் தெளிவாக உணர்த்தும், அரசின் நிதிக் கொள்கை வாயிலாக அரசின் படம் - 6 செலவுகள், வரிவிதிப்பு ஆகியவற்றில் மாற்றங்களை நிகழ்த்தி, வருமான அளவை மாற்ற முடியும். இம்முறையோடு பணவாக்கு முறையும் சேர்ந்து செயற்படும். பண அளிப்பை ஒழுங்குபடுத்த இவ்விரு முறைகளும் சேர்ந்து செயற்படுதல் இன்றியமையாதது. பொதுவாக, ஒரு நாட்டின் பொருளாதாரச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அந்தாட்டின் நிதிக் கொள்கையும் பணவாக்குக் கொள்கையும் அமையும்.மா.செ.சே.ச. துணை நூல்கள் Dillard D., “Economics of John M. Keynes Lock–wood”, London, 1966. Rangarajan C. & Dholakia B.H., “Principles of Macro Economics”, Tata - McGraw Hill, New Delhi, 1982. Carl Pointdexter J., “Macro Economics”, The Dryden Press, Illinois, 1976.