திருமாலின் ஒரு வடிவம், தனது தவ வலிமையால் மனிதர்களாலோ விலங்கினங்களாலோ அழிக்கமுடியாத வரத்தினைப் பெற்றுத் தேவர்களுக்குத் தீங்கிழைத்து வந்தான் ஓர் அரக்கன். தேவர்கள் சக்திமிகுந்த தேவியிடம் முறையிட்டனர். தேவி அவர்களைத் திருமாலிடம் செல்லும்படி கூற, திருமால் மனித உடலும் குதிரையின் முகமும் பெற்றவராகத் தோன்றி அவ்வரக்கனை அழித்தார். இவ்வடிவத்தையே அயக்கிரீவர் என்று குறிப்பிடுகின்றனர். இவ்வரலாற்றைத் ‘தேவி பாகவதம்’ எனும் நூல் குறிப்பிடுகிறது. அயக்கிரீவர் அயக்கிரீவர் எட்டுக் கைகளைக் கொண்டவராக நிலத்தாயின் விரிந்த உள்ளங்கைகளின் மேல் நின்றவாறு காட்சியளிப்பார். இவர் தம் நான்கு கைகளில் சங்கு, சக்கரம், கதை, தாமரைமலர் ஆகியவற்றையும், பிற நான்கு கைகளில் மனித உருவமாகச் திரிக்கப்பட்ட நான்கு வேதங்களையும் கொண்டுள்ளார். இவர் பல்வேறு அணிகலன்களை அணிந்து காட்சியளிக்கிறார். இவர் கலைமகளுக்கு இணையான தகுதிகளைப் பெற்றவராகக் கருதப்படுகிறார். துணை நூல் GopinathaRao, T.A., “Elements of Hindu Iconography”, Vol. I, Part I, Indological Book House, Delhi, 1971.