அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி
acaratnicāmutīṉ auliyā cicuṭi
கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இசுலாமிய அருள் தொண்டர்.
கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இசுலாமிய அருள் தொண்டர். இந்திய நாட்டின் தலைநகர் புதுதில்லிக்கு அண்மையில் அவரது பெயரில் வழிபாட்டுத் தலம் ஒன்றுள்ளது. இவர் கி.பி. 1325-ஆம் ஆண்டில் காலமானார். இவரது உடல் புதைக்கப் பெற்ற இடம் புனிதமானதாக இசுலாமியர்களால் கருதப்படுகிறது. இவர் தில்லி சுல்தான்களின் சமயப் பெரியாராகத் திகழ்ந்தார். புதிய தலைநகரான துக்ளகாபாத்தைக் கட்டிக் கொண்டிருந்த இயாசுதீன் துக்ளக்கு அரசருக்கும் அசரத் நிசாமுதீன் ஒளலியா சிசுடிக்கும் (Hazrat Nizamuddin Aulia Chishti) மோதல் ஏற்பட்டது. அங்கிருந்து தில்லிக்குப் புறப்பட்டு வரும் வழியில் சிசுடி கொல்லப்பட்டார். புதிய தலைநகர் கட்டும் பணியை கியாசுதீனின் மகன் கைவிட்டு விட்டார். இன்றைய தில்லிமாநகர்ப் புகைவண்டி நிலையத்திற்கு அண்மையில் இவர் நினைவாக அசரத்து நிசாமுதீன் என்ற புதிய புகைவண்டி நிலையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 165)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nvyde5ns/
தமிழ்“அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nvyde5ns/APA
Oliyon Research. (2026). அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nvyde5ns/MLA
"அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nvyde5ns/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment