சிதைவு மின்னழுத்தம்
citaivu miṉṉaḻuttam
மின்னாற்பகுப்பின் போது, இரு மின் முனைகளுக்கு இடையே ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் குறையாத மின்னழுத்த வேறுபாட்டை ஏற்படுத்த வேண்டும்.
மின்னாற்பகுப்பின் போது, இரு மின் முனைகளுக்கு இடையே ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் குறையாத மின்னழுத்த வேறுபாட்டை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் மின்னாற்பகுப்பு நடைபெற்று, விளைபொருள்கள் மின் முனைகளில் படியும். இந்த அளவுக்குக் குறைவான மின்னழுத்த வேறுபாடு, மின்னாற்பகுப்பு நடைபெறப் போதுமானதன்று. இவ்வாறு ஓர் அமைப்பில் மின் பகுப்பு நடத்தத் தேவைப்படும் சிறும அளவு மின்னழுத்த வேறுபாடே சிதைவு மின்னழுத்தம் (decomposition potential) எனப்படும்.
சிதை மின்னழுத்தம் தோன்றுவதற்கான காரணத்தைப் பின் வரும் ஆய்வு முடிவுகள் தெளிவாக விளக்குகின்றன. ஒரு கேல்வானிக் மின்கலத்தில் வேதி ஆற்றல் குறைவு, மின்னாற்றல் தோற்றத்திற்குச் சமமாக அமையும். அதாவது –ΔG=ZnF ஆகும். ஒரு மீளும் மின்கலத்திற்கு இச்சமன்பாடு பொருத்தமாகக் காணப்பட்டாலும், மீளாச் செயல் முறையின் போது (irreversible process) தோன்றும் மின்னாற்றலின் அளவு குறைவாகவே உள்ளது. அதாவது, -ΔG > ZnF இவ்வேறுபாடு வெப்பமாக வெளியேறுகிறது. இவ்வகை மின்கலன்களில், மின்னாற்பகுப்பு நிகழ்த்த, மீளும் செயல் முறைகளில் கணக்கிடப்பட்ட மின்னழுத்த வேறுபாட்டை விட, அதிக அளவு மின்னழுத்த வேறுபாட்டைப் பயன்படுத்த வேண்டும். இந்நிலையில்தான் அமைப்பு முனைவு (polarisation) பெற்றுள்ளதாகக் கொள்ளப்படும். காட்டாக, டேனியல் மின்கலத்தில் நிகழும் வினை: Zn | Zn+ (a=1.0) | Cu+ (a=1.0) | Cu. இதில் அயனிகளின் செறிவு 1 ஆகக் காணப்படும். இக்கலத்தின் மின்னியக்க உந்து விசை (electro motive force) 298 Kஇல், E மின்கலம் = E°Cu² + |Cu-E°Zn²+ | Zn
= 0.037-(-0.7628)
= 1.0998 வோல்ட்
Zn + Cu(a=1)⟶ Zn(a=1) இவ்வினையை மீளச் செய்ய, வெளிப்புறமிருந்து ஒரு மின் இயக்க விசையை இணைக்க வேண்டும். செலுத்தப்படும் மின்னியக்க விசை 1,0988 வோல்ட்டுக்குக் குறைவாக இருக்கும் வரை, கலத்தின் வெளிச் சுற்றில் எலெக்ட்ரான்கள் துத்த நாகத்திலிருந்து, தாமிரத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கும். செலுத்தப்படும் மின்னியக்கு விசை 1.0988 வோல்ட்டாக இருக்குமானால், மின் சுற்றில் எவ்வித எலெக்ட்ரான் இயக்கமும் தோன்றாது. இந்த அளவிற்கு மிகையாக இருக்கும் போது, வெளிச் சுற்றில் தாமிரத்திலிருந்து துத்தநாகத்திற்கு எலெக்ட்ரான்களின் இயக்கம் இருப்பதைக் காணலாம். இப்போது வினை எதிர்த் திசையில் நடைபெறுகிறது. அதாவது, தாமிரம் கரைகிறது; துத்தநாகம் வீழ்படிவாகிறது. இச்செயல்பாட்டை ஆய்வில் பெறும் போது, 1.0988 வோல்ட்டுக்கு அதிகமான மின்னியக்க விசையை வெளியிலிருந்து செலுத்த வேண்டும். இதற்குக் காரணம், கலம் முனைவு பெறுதலே ஆகும். கலம் முனைவு பெறப் பின் வருவன காரணங்களாக அமைகின்றன:
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> மின் அடர்த்திக்கும், பயன்படுத்தப்படும் மின்னழுத்த வேறுபாட்டிற்கும் வரை படம் வரைந்தால், மின்னழுத்த வேறுபாடு குறைவாக இருக்கும் போது, மின் அடர்த்தி குறைவாக இருப்பதையும், ஒரு குறிப்பிட்ட அளவிற்குப் பின் இம்மதிப்புத் திடீரென உயர்வதையும் காணலாம். வரைபடத்தில் எப்புள்ளியில் மின்னழுத்த வேறுபாடு உயர்கிறதோ, அதற்குச் சமமான மதிப்பே அவ்வமைப்பில் சிதைவு மின்னழுத்தம் ஆகும்.
அட்டவணை 1
அட்டவணை 2
சில அமிலங்களின் சிதைவு மின்னழுத்தம் அட்டவணை (1) இலும், சில காரங்களின் சிதைவு மின் அழுத்தம் அட்டவணை (2) இலும் கொடுக்கப்பட்டுள்ளன.
பொதுவாக அனைத்து அமிலங்களிலும், காரங்களிலும் சிதைவு மின்னழுத்தம் ஒரே அளவாகவே இருக்கும். எனவே, லி பிளாங்க் என்பார் இவை அனைத்திலும் ஒரே விதமான மின் சிதைவு நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இங்கு நடைபெறும் பொது வினை நீர் சிதைவடைதலே ஆகும். —பி. ஈ. எம். லியாகத் அலிகான்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 235)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nvuceggh/
தமிழ்“சிதைவு மின்னழுத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nvuceggh/APA
Oliyon Research. (2026). சிதைவு மின்னழுத்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nvuceggh/MLA
"சிதைவு மின்னழுத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nvuceggh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment