இலக்கண தீபம்
ilakkaṇa tīpam
கற்றாரிடையே வழக்கில் இல்லாத இலக்கண நூல்களுள் ஒன்று.
கற்றாரிடையே வழக்கில் இல்லாத இலக்கண நூல்களுள் ஒன்று. தனி நூலாக இதுவரை இது அச்சேறவில்லை, ‘செந்தமிழ்’ இதழில் 1916–ஆம் ஆண்டில் இது வெளிவந்துள்ளது. இரா. இராகவையங்கார் வைத்திருந்த ஒரே பிரதியைப் பெற்றுப் பதிப்பித்ததாகப் பதிப்பாசிரியர் குறிப்பிட்டுள்ளார். நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. நூல் தோன்றிய காலமும் அறியமுடியவில்லை.
பன்னிரு சீர்கள் கொண்ட பதினான்கு விருத்தங்களால் ஆயது இச்சிறுநூல். சிதைந்த நிலையில் உள்ள இறுதிப் பாடல் உள்ளவாறே அச்சிடப்பெற்றுள்ளது. பிற இலக்கண நூல்கள் போல இலக்கணம் கூறாமல். எண்ணிக்கை விவரம் மட்டும் கூறுவது இந்நூல். காட்டாக, புறத்திணை பற்றிய எட்டாம் பாடல் புறப்பொருள் வெண்பா மாலை கூறும் திணை, துறைகளின் துறைகளின் எண்ணிக்கையை ‘ஏய்ந்தவிரி வெட்சியினிலிருபது கரந்தையினி லீரேழு வஞ்சிமூவேழிகற் காஞ்சியிருபத் திரண்டிருப தோடென்ப தெழிலுழிஞை நொச்சியொன்பான்’ எனப் பாடலாக்கித் தருகிறது. இவ்வாறே அனைத்துப் பாடல்களிலும் தொகை வகை எண்ணிக்கைகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.
முதல் ஆறு பாடல்களில் எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் பற்றிய செய்திகளும், ஏழாம் பாடலில் அகத்திணைச் செய்திகளும், எட்டாம் பாடலில் புறத்தினைச் செய்திகளும், ஒன்பதாம் பாடலில் அணிநூற் செய்திகளும், பத்தாம் பாடலில் பாட்டியற் செய்திகளும், பதினொன்று, பன்னிரண்டு, பதின்மூன்றாம் பாடல்களில் முச்சங்க வரலாற்றுச் செய்தி- களும் பேசப்படுகின்றன. பதினான்காம் பாடல் சிதைந்துள்ள போதிலும் உரை வரலாறு கூறுவதாக உள்ளது.
இறையனார் களவியல் உரை கூறும் தமிழ்ச்சங்க வரலாற்றுச் செய்திகளுக்கும், இவ்விலக்கண தீபம் கூறும் வரலாற்றுச் செய்திகளுக்கும் ஒரு சில வேறுபாடுகள் காணப்பெறுகின்றன. முதற்சங்கம் இருந்த புலவர் தொகை 549 என்று களவியல் உரை கூற 449 என்று இந்நூல் குறிக்கும். இடைச்சங்க, கடைச்சங்கப் புலவர் தொகையிலும் வேறுபாடு காணப்படுகிறது.
கவிதை இயற்ற விரும்புவர்கள் எல்லா இலக்கணங்களையும் நன்கு அறிந்து இலக்கணம் தவறாது கவிதை பாடுவராயின் அவர்கள் கவிதைகள் ‘இலக்கணக் கவிதைகள்’ ஆம் என்றும், அல்லாதார் செய்யும் கவிதைகள் ‘அவலக்கணக் கவிதைகள்’ ஆம் என்றும் இந்நூல் மொழிகிறது.
::‘அறிந்துசொல் வதிலக்க ணக்கவிதை யல்லாத ::தவலக்க ணக்கவிதையே’
என்று பெரும்பாலான பாடல்களின் இறுதியில் மகுடம் அமைந்துள்ளது குறிக்கத்தக்கது.
இலக்கணம் கூறாது வெறும் எண்ணிக்கை மட்டுமே கூறுதல் இந்நூலைப் பலரும் போற்றாமைக்குரிய காரணங்களில் ஒன்றாதல் கூடும். அ.வி.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 276)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nsyzxfzj/
தமிழ்“இலக்கண தீபம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nsyzxfzj/APA
Oliyon Research. (2026). இலக்கண தீபம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nsyzxfzj/MLA
"இலக்கண தீபம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nsyzxfzj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment