அட்சன் நீர்ப்பிரிவு
aṭcaṉ nīrppirivu
வடகிழக்குக் கானடாவில் தரபின் தீவிற்கும் குவிபெக்கு மாநிலத்திற்கும் இடையிலுள்ளது.
வடகிழக்குக் கானடாவில் தரபின் தீவிற்கும் குவிபெக்கு மாநிலத்திற்கும் இடையிலுள்ளது. இந்நீர்ப்பிரிவு, அட்சன் விரிகுடாவையும் அட்லாண்டிக்குப் பெருங்கடலையும் இணைக்கிறது. இதன் நீளம் 720 கி.மீ; அகலம் 80 கி.மீ. முதல் 240 கி.மீ. வரை மாறுபடுகிறது. வேகம் மிகுந்த நீரோட்டமும் பனிக்கட்டிகள் நகர்வதும் கப்பல் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன. அட்சன் விரிகுடா வாணிகக் குழுவினர் இந்நீர்ப்பிரிவை கி.பி. 17–ஆம் நூற்றாண்டிலிருந்து பல இன்னலுக்கிடையிலும் கப்பலோட்டிப் பயன்படுத்தி வந்தனர். இந்நீர்ப்பிரிவில் முதன்முதலாகக் கப்பலோட்டிச் சென்றவர் புரோபிசர் (Frobisher) என்பவராவார். இந்நீர்ப்பிரிவை கி.பி. 1610-ஆம் ஆண்டில் என்றி அட்சன் கண்டுபிடித்தார். அதனால் இது இவர் பெயர் கொண்டு விளங்குகிறது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 204)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nsbdp8nw/
தமிழ்“அட்சன் நீர்ப்பிரிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nsbdp8nw/APA
Oliyon Research. (2026). அட்சன் நீர்ப்பிரிவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nsbdp8nw/MLA
"அட்சன் நீர்ப்பிரிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nsbdp8nw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment