இளங்குமணன்
iḷaṅkumaṇaṉ
புகழ் பெற்ற சங்க கால வள்ளல்களுள் ஒருவனாகிய குமணனின் தம்பி.
புகழ் பெற்ற சங்க கால வள்ளல்களுள் ஒருவனாகிய குமணனின் தம்பி. சூழ்ச்சித் திறத்தால் குமணனின் நாட்டைக் கைப்பற்றி அவனைக் காட்டில் கரந்து வாழச் செய்தவன். அண்ணன் மறைந்து வாழ்வதனையும் பொறாமல் அவனைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியவன். குமணன் புகழ்பாடிப் பலவேளைகளில் பரிசில் பெற்ற பெருஞ்சாத்தனார் என்னும் புலவர் குமணனின் கொடைமடத் தன்மையை இளங்குமணனிடம் எடுத்துக் கூறுவதாக ஒரு புறப்பாடல் (புறம். 165) அமைந்துள்ளது. குமணன் சால்பினை எடுத்துக் கூறி, இளங்குமணனின் மனத்தினை மாற்றுவதற்குப் புலவர் மேற்கொண்ட முயற்சியாக அப்பாடற் கருத்தைக் கொள்ளலாம். இப்பாடலிற் சுட்டிய சிறு நிகழ்ச்சி ஓர் ஓரங்க நாடகமாக இக்காலத்தில் வளர்ச்சியடைந்துள்ளது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 464)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nj9pefe8/
தமிழ்“இளங்குமணன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nj9pefe8/APA
Oliyon Research. (2026). இளங்குமணன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nj9pefe8/MLA
"இளங்குமணன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nj9pefe8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment