இன்ப துன்பச் சம நோக்காளர்
iṉpa tuṉpac cama nōkkāḷar
கிரேக்க நாட்டின் முற்கால வரவாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
கிரேக்க நாட்டின் முற்கால வரவாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். இவர்கள் கூர்மையான அறிவு, சுருங்கக்கூறி விளங்க வைக்கும் சொல்லாற்றல். சமுதாயத்தில் படிந்திருந்த இன்னல்கலையும் மூடப்பழக்க வழக்கங்களையும் ஊடுருவிப் பற்றி, அவற்றைச் சுட்டிக்காட்டும் வாதத் திறமை போன்ற இயல்புகளினால் கிரேக்க மக்களைத் தம்பால் ஈர்த்து, சமுதாய அரசியல் அமைப்புகளில் புரட்சி (கி.மு. 500) உருவாகத் தூண்டுகோலாக விளங்கினர். இன்ப துன்பச் சமநோக்காளர் (Stoics) ஏதென்சு நகரில் அமைந்த குடியரசு அமைப்பில் முனைந்து ஈடுபட்டனர்.
கிரேக்க நாட்டில் அமைதியற்ற அரசியலும் பகுத்தறிவிற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களும் மண்டியிருந்த காலகட்டத்தில் இன்ப துன்பச் சமநோக்குக் கோட்பாடு தோன்றிச் செல்வாக்குற்றது. இக்கோட்பாட்டு அறிஞர்கள் எதையும் ஆழ்ந்து ஆராய்ந்த பின்னரே ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும் என்றும், இவ்வாராய்ச்சிக்குப் பொருள்களை விரிவாக அறியத் தூண்டவல்ல ஐயக்கொள்கை (Scepticism) இன்றியமையாதது என்றும் வலியுறுத்தினர். இவர்கள் தனிமனிதனின் தகுதியையும் உரிமையையும் மிகைப்படுத்தி, அவனுக்குத் தன்னம்பிக்கையை ஊக்கும் வகையில் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது யாதும் இல்லை என்றனர். மனிதனின் பிறப்பு, இறப்புப் போன்ற இயற்கை நிகழ்ச்சிகளில் சடங்குகள் புகுத்துதலைக் கண்டித்தனர். மனிதனின் பகுத்தறிவே முதன்மையானது; அறவியல் என்பது ஒவ்வோர் ஆடவராலும் பெண்டிராலும் கடைப்பிடிக்க இயலும் நடத்தையே; மனிதன் நல்லவனாகவும் தீயவனாகவும் ஒழுகுவது அரசாட்சியின் இயல்பைப் பொறுத்தது; எனவே, அரசாட்சியின் வலிமைக்கேற்பவே சமுதாய அமைப்புகளும் வலிமையுடன் விளங்கும் என்று இவர்கள் எடுத்துரைத்தனர்.
இன்ப துன்பச் சம நோக்காளரின் எழுச்சியால் கருத்து முதற்கொள்கை (Idealism) செல்வாக்குக் குன்றியது மக்களிடையே புதிய அறிவியல் அணுகு முறை மேலோங்கியது. புலன்வழிக் கொள்கை (Empricism), பயன்கருது கொள்கை (Utilitarianism) ஆகியன புத்துணர்ச்சி பெற்றன. மக்கள் விழிப்படைந்து சமுதாய மறுமலர்ச்சி ஏற்பட்டது.
இன்ப துன்பச் சம நோக்காளர்களுள் புரோட்டோ கோரசு (Protogorus), கார்கியசு (Gorgias), ஆண்டிகோன் (Antigone), திராசிமாக்கசு (Throycymachues), காலிகில்சு (Callicles), சாக்கிரட்டீசு (Socrats), பிளேட்டோ (Plato), அரிசுடாட்டில் (Aristotle) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர். இவர்கள் தம் அறிவாலும் கருத்துகளை எடுத்துரைக்கும் ஆற்றலாலும் உலகப் புகழ் பெற்றனர்.
இக்கோட்பாடு இதனை எடுத்துரைத்தோரிடையே அமைந்துகிடந்த தன்னலமிகுதி, வரம்பற்ற வெற்று வாக்கு வாதம் போன்றவற்றாலும் அதனால் உரு- வான சமுதாயப் பிரிவுகளாலும் நாளடைவில் செல்வாக்கு இழந்தது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 558)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nhnumx7z/
தமிழ்“இன்ப துன்பச் சம நோக்காளர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nhnumx7z/APA
Oliyon Research. (2026). இன்ப துன்பச் சம நோக்காளர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nhnumx7z/MLA
"இன்ப துன்பச் சம நோக்காளர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nhnumx7z/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment