சோமசுந்தர நாய்க்கர்

cōmacuntara nāykkar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் ஒரு சிறந்த சைவசித்தாந்தி. வடமொழி தென்மொழிகளையும், சைவசித்தாந்த சாஸ்திரங்களையும், திருமுறைகளையும், நன்கு பயின்றவர். சைவசித்தாந்த சண்ட மாருதம் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர். இவர் வைணவ சமயத்தைச் சார்ந்த குடும்பத்தினர். அதுபோது சங்கசாமி என்பது பிள்ளைத் திருநாமம். இவர் ஏகாம்பர சிவயோகியாரால் சோமசுந்தரம் என்று அழைக்கப்பட்டவர். வாதம் செய்து தம் கொள்கைகளை நிலைநிறுத்துவதில் ஈடும் எடுப்பும் அற்றவர். தம் அறிவுத் திறனைப் பேச்சாலும் எழுத்தாலும் காட்டியவர். இவர் திருஞான சம்பந்தரை ஆத்மார்த்த ஞானாசிரியராகக் கொண்டவர். சென்னை, சூளையில் வாழ்ந்தவர். இவர் நூற்றுக்கு மேலும் நூல்களை எழுதியவர். அனைத்தும் சிவபரத்துவம், நால்வர் பெருமை, சைவசமய ஏற்றம் முதலான பொருள்களைக் கொண்டு மிளிரும். இவர் எழுதிய நூற்களில் சில சிவாதிக்க இரத்தினாவளி, சித்தாந்த ரத்தினாகரம், சித்தாந்த ஞானபோதம், ஆசாரிய பிரபாவம், வேத சிவாகமப் பிரமானியம், சிவகாமப் பஃறொடை வெண்பா முதலியன. இவரது தலை சிறந்த மாணவர் மறைமலையடிகளார். காலம் 19 ஆம் நூற்றாண்டு. இவர் சொற்பொழிவு ஆற்றும்போது, எவரும் மேலாடை அணிந்து கொண்டு கேட்டல் கூடாது. அப்படி மேலாடையுடன் கேட்பவரை எழுந்து போமாறு கூறும் அத்துணைக் கண்டிப்பு உடையவர்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 597)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nee5fg95/

தமிழ்
“சோமசுந்தர நாய்க்கர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nee5fg95/
APA
Oliyon Research. (2026). சோமசுந்தர நாய்க்கர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nee5fg95/
MLA
"சோமசுந்தர நாய்க்கர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nee5fg95/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment