இதுவொரு தனிப்பாடல் திரட்டு நூலாகும். இன்னும் அச்சில் வெளிவராத தமிழ் நூல்களுள் ஒன்று, தஞ்சையிலுள்ள சரபோசி மன்னர் சரசுவதி மகால் நூலகத்தில், ஓலைச்சுவடியாக உள்ள இதன் மூல ஏடும், கையெழுத்துப் படியும் உள்ளன. பனையோலையேட்டின் பக்கம் ஒன்றிற்கு 4 முதல் 7 வரிகள் கொண்ட 107 ஏடுகள் அடங்கியது இச்சுவடி. இதன் முதலிரு ஏடுகளும் இடையிடையே சில பகுதிகளும் சிதைந்துள்ளன. இதில் காளமேகப் புலவர், ஒட்டக்கூத்தர் முதலிய புலவர்களின் தனிப்பாடல்கள் உள்ளன. இச்செய்யுள்களில் இதுகாறும் அச்சு வடிவம் பெறாத செய்யுள்களும் உள்ளன. இப்பெயரிலேயே அச்சிடப்படாத கையெழுத்துப் பிரதி ஒன்று சென்னை அரசாங்கக் கையெழுத்துப் பிரதி நூலகத்திலும் இருப்பதாகத் தெரிகிறது.