அட்மிரால்டி தீவுகள்
aṭmirālṭi tīvukaḷ
நியூ கினியின் வடக்கிலுள்ள தீவுக் கூட்டம்.
நியூ கினியின் வடக்கிலுள்ள தீவுக் கூட்டம். பசுபிக்குப் பெருங்கடலின் தென்மேற்கில் உள்ள பிசுமார்க்குத் தீவுக்குழுவில்
அட்மிரால்டி தீவுகள் - மானசு தீவு
அமைந்துள்ள அட்மிரால்டி தீவுகளை மானசு (Manus) என்றும் கூறுவர். இத்தீவுகளின் மொத்தப் பரப்பு 2070 ச.கி.மீ. உள்ளூர் வாசிகளை மாலனேசியர் (Melanesians) என்பர், கி.பி. 1616–இல் இதனை முதன் முதலாகக் கண்டுபிடித்தவர் வில்லெம் சூட்டன் என்னும் தச்சு (Dutch Sailor) மாலுமியாவார். கி.பி. 1884–இல் இத்தீவுகளைச் செருமனி உரிமை பாராட்டியது. முதல் உலகப் போரின்போது இத்தீவுகளை ஆசுதிரேலியர் கைப்பற்றினர். இரண்டாம் உலகப் போரின் போது சப்பான் இவற்றைக் கைப்பற்றியிருந்தது. அமெரிக்கப் படைத் தளபதி மக்கார்தர் மானசுத் தீவினை 1944–இல் மீண்டும் கைப்பற்றி மேற்கு நாடுகளின் படையெடுப்பு அடித்தளமாக இதனைப் பயன்படுத்திக் கொண்டார். பாப்புவா நியூகினி (Papua New Guinea) என்னும் விடுதலை பெற்ற நாட்டின் பகுதியாக இத்தீவுகள் மாறின. மானசுத் தீவு கரடுமுரடான மலைத் தொடர்களைக் கொண்டது. வெப்ப மண்டலமாதலின் இங்கு நல்ல மழை பொழிகிறது. ஆண்டுக்கு 380 செ.மீ. மழை பெய்கிறது. இங்குள்ள குறுகிய ஆறுகள் வேகமாகச் செல்லக் கூடியவை. தாழ்நிலங்களில் சதுப்பு நிலக் காடுகளும், பெருந்தென்னந்தோப்புகளும் உள்ளன. மலஞ்சுனை, காச்சைக்கிழங்கு, வாழை, அன்னாசி, சவ்வரிசி, முதலானவை இத்தீவுகளில் பயிரிடப்படும் பொருள்களாகும். மானசுத்தீவின் கீழ்க்கோடியிலுள்ள இலோரங்கா (Lorengau) என்னும் நகர் சிறந்த துறைமுகமும் நிருவாக மையமுமாகும். மக்கள் தொகை 26,036. தலைநகர் இலோரங்கா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 219)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nc4uwz2r/
தமிழ்“அட்மிரால்டி தீவுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nc4uwz2r/APA
Oliyon Research. (2026). அட்மிரால்டி தீவுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nc4uwz2r/MLA
"அட்மிரால்டி தீவுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nc4uwz2r/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment