பண்டைய உரோமானியர் காலக் கதையினில் வரும் தலைவன். இவன் ஒரு முதலாளியிடம் அடிமையாய் இருந்தான். அங்கிருந்து தப்பித்துச் சென்று ஒரு குகையினில் ஒளிந்திருந்தான். அக்குகையில் முள்ளடிபட்டு வருந்திக்கொண்டிருந்த சிங்கத்தின் உள்ளங்காலிலிருந்த முள்ளினை எடுத்து அதன் நண்பனானான். பின்னர் முதலாளியிடம் பிடிபட்டு உரோமாபுரியிலிருந்த ஓர் அரங்கத்தில் சிங்கத்துடன் போரிடும் தண்டனையைப் பெற்றான். சிங்கத்திடம் போரிட அந்திரோகிலிசு (Androcles) முயன்ற பொழுது, சிங்கம் அவனைத் தாக்க முன்வரவில்லை. அச்சிங்கமே அவன் குகையில் காப்பாற்றிய சிங்கமாகும். எனவே, அவனை அடையாளம் கண்டு அச்சிங்கம் போரிட மறுத்தது. இக்கதையைப் பெர்னார்டு என்னும் அண்மைக்கால ஆங்கிலக் கவிஞர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.