ஒரு சுரத்தான நிலையுள் (தாயினுள்) 22 அலகுகள் உண்டு என்று பண்டைத் தமிழிசைப் பாணர்கள் பகுத்துக் கணக்கிட்டிருந்தார்கள். அலகு என்பது ஓர் இசை நரம்புக்கும் (சுரத்திற்கும்) அடுத்த இசை நரம்புக்கும் இடையே ஏற்படும் இடைவெளி ஒலி அளவு ஆகும். இந்த ஒலி அளவைக் குறிக்கும் பெயர்கள் மாத்திரை, கருதி, அலகு என்பன. ஏழிசை நரம்புகளின் பெயர்கள் – குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. இப்பெயர்களின் முதல் எழுத்தால் இவை குறிக்கப்படுகின்றன. ஏழ்நரம்புக்கு அலகுப் பகுப்புகள் இங்குப் பகுத்துக் கூறப்பட்டுள்ள அலகுகள் செம்பாலை என்னும் பண்ணுக்குரிய அலகுகள் இங்கு மூன்றுவகை அலகுகள், உள்ளன: அவை 4,3,2 என்று அலகுத் தொகை பெறுவன. :நான்கு அலகுகளைப் பெறுபவை –கு.து.இ (ச.ரி.ப) :மூன்று அலகுகளைப் பெறுபவை –கை.வி. (க.த) :இரண்டு அலகுகளைப் பெறுபவை –உ.தா. (ம.நி) இவற்றை விளக்கும் சிலப்பதிகார மேற்கோள் பாடல்: ::::அலகுப் பகுப்பு ::குரலே துத்தம் இளியிவை நான்கும் ::விளரி கைக்கிளை மும்மூன் றாகித் ::தளராத் தாரம் உழையிவை ஈரிரண்டு ::எனஎழும் என்ப அறிந்திசி னோரே :::— (சிலப்.வேனிற். 31–32 அரும்பதவுரை) மேற்கூறிய செம்பாலைக்குரிய இந்த நரம்புக் கணக்குகளையே சேந்தன் திவாகர நிகண்டும் பஞ்ச மரபு நூலும் கூறுகின்றன. சிலப்பதிகாரமும் கட்டிக் காட்டுகிறது. எனவே ஒரு சுரத்தான நிலைக்கு 22 அலகுக் கணக்கு முறையே 2000 ஆண்டுகட்கு முன்னிருந்து வழங்கி வருகிறது என அறியலாம். இந்தப் பகுப்பைப் பன்னிரு நரம்புகட்கும் பகுத்துக் காண்போம். இந்த அலகுகள் செம்பாலைக்குரியன. செம்பாலை என்பது அரிகாம்போதி இராகம் ஆகும்.வீ.ப.கா.சு.