அகத்தீசர் சதகம்
akattīcar catakam
அகத்தீசர் சதகம் என்னும் நூல் குணங்குடி மசுதான் சாகிபு அவர்களால் (கி.பி.
அகத்தீசர் சதகம் என்னும் நூல் குணங்குடி மசுதான் சாகிபு அவர்களால் (கி.பி. 1800–1847) இயற்றப்பட்டது. அகத்தில் விளங்கும் ஈசன் அகத்தீசன். அந்த ஈசன்மேல் பாடப்பெற்றது இச்சதக நூல். இது, குருவருள் நிலை, தவநிலை, துறவின் நிலை, நியம நிலை, வளி நிலை, தொகை நிலை, பொறை நிலை, காட்சி நிலை, தியான நிலை, சமாதி நிலை ஆகிய பத்துத் தலைப்புகளில் ஒவ்வொன்றிற்கும் பத்துப் பாடல்களாக நூறு பாடல்களையுடையது.
‘குணங்குடி வாழும் என் அகத்தீசனே! மவுன தேசிக நாதனே’ என்று ஒவ்வொரு பாடலிலும் ஈசனை விளித்துத் தமக்கு வேண்டியதை அளிக்கத் தம் அருகே வரவேண்டும் என்று நூலாசிரியர் வேண்டுகிறார். இதன்கண், இறைவன் மனத்துள் குருவாக இருந்து அருள்புரிய வேண்டும் எனவும், மனத் தத்துவங்கள் அனைத்தும் கடந்த அருள் வேண்டும் எனவும். காம, குரோத, மோகம் முதலிய அனைத்தும் நீக்கிட அருள வேண்டும் எனவும் வேண்டுகிறார். மேலுமவர் இறைவனைப் பிரியாத நியம நிலை, இரேசக, பூரக, கும்பக நிலை ஆகியவற்றை உணர்த்தி வாயுவை அடக்கும் உபாயம், பொறியுணர்வெல்லாம் புறத்தில் செல்லாது அகமுகப்படுத்தும் நிலை, மனத்தினை ஒருவழிப்படுத்தும் பொறுமை நிலை, ஒளிமயமான இறைவன் தோற்றத்தினைக் கண்டு மகிழும் நிலை, மனநிலை திரியாமல் குறித்த பொருளோடு நிற்கும் தியான நிலை, மனம் அடங்கி, அஞ்சி ஒடுங்கும் சமாதி நிலை ஆகியவற்றை அருள வேண்டும் எனவும் வேண்டியுள்ளார். வி.பா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 81)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/naex5363/
தமிழ்“அகத்தீசர் சதகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/naex5363/APA
Oliyon Research. (2026). அகத்தீசர் சதகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/naex5363/MLA
"அகத்தீசர் சதகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/naex5363/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment