அதிவீரராம பாண்டியர்
ativīrarāma pāṇṭiyar
பொருள்கள் · Senses
1.
இவர் குலசேகர பாண்டியன் திருமகனார். இவரது தமையனார் வரதுங்க பாண்டியர். கொற்கை, தென்காசி ஆகியவற்றைத் தலைநகராகக் கொண்டு மதுரையை ஆண்டவர். இவரது ஆசிரியர்கள் சுவாமிநாத தேவர், வேம்பத்தூர் ஈசான முனிவர், சுவாமி வாசுதேவர், சிதம்பரம் அகோர சிவாசாரியார். இவருக்கு வல்லபதேவன், பிள்ளைப்பாண்டியர், குலசேகரன், குண சேகரவழுதி என்ற பெயர்ளும் உண்டு. இவர் இயற்றிய நூல்கள் நைடதம்,காசிகாண்டம், கூர்மபுராணம், லிங்க புராணம், வாயுசங்கிதை வெற்றி வேற்கை என்பன. இவரது தமையனார் வரதுங்க பாண்டியரும் பல நூல்களைச் செய்திருப்பதால் "பட்டரில் இருவர் பாண்டியில் இருவர்" என்ற பழமொழியும் வழக்கத்தில் உள்ளது. பட்டரில் இருவர் சிவஞான முனிவரும், கச்சியப்பரும். பாண்டியில் இருவர் வரதுங்கரும், அதிவீரராமரும் : தவறுடைய பாடல்களைப் பாடிவரும் புலவர்களின் தலையில் குட்டி வந்த பாண்டியர் இவர். இவரைக் குறித்துத்தான் 'குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டியன் ஈங்கில்லே' என்ற பாடலும் எழுவதாயிற்று.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n7dzx5vr/
தமிழ்“அதிவீரராம பாண்டியர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n7dzx5vr/APA
Oliyon Research. (2026). அதிவீரராம பாண்டியர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n7dzx5vr/MLA
"அதிவீரராம பாண்டியர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n7dzx5vr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment