கன்ட்ரோல்-ஆல்ட்-டெலீட்

kaṉṭrōl-ālṭ-ṭelīṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஐபிஎம் மற்றும் ஒத்தியல்புக் கணினிகளில் மீட்டியக்கப் (reboot) பயன்படும் மூவிசைச் சேர்க்கை. Ctrl, Alt, Del என்று குறிக்கப்பட்டுள்ள மூன்று விசைகளையும் ஒருசேர அழுத்தினால் எம்எஸ் டாஸில் இயங்கும் கணினியில் இடைத்தொடக்கம் (warm boot) நடைபெறும். இம்முறையில் கணினி, அகப் பரிசோதனைகள் அனைத்தையும் மேற்கொள்வதில்லை. மின்சாரத்தை நிறுத்தித் தரும் முதல்தொடக்க (cold boot) முறையில் அனைத்துச் சரிபார்ப்புகளும் நிகழும். விண்டோஸ் 95/98/ என்டி/2000 இயக்க முறைமைகளில் Ctrl+Alt+Del விசைகளை அழுத்தும் போது ஒர் உரையாடல் பெட்டி தோன்றும். நடப்பிலுள்ள ஒரு பணியை மட்டும் முடித்து வைக்கலாம். அல்லது கணினியையே நிறுத்தவும் செய்யலாம் — Ctrl-Alt-Delete
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 124)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n6c5qksj/

தமிழ்
“கன்ட்ரோல்-ஆல்ட்-டெலீட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n6c5qksj/
APA
Oliyon Research. (2026). கன்ட்ரோல்-ஆல்ட்-டெலீட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n6c5qksj/
MLA
"கன்ட்ரோல்-ஆல்ட்-டெலீட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n6c5qksj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment