பசிபிக்குப் பெருங்கடலில் உள்ள கடல். இது ஆசுதிரேலியாவின் வடகடற்கரைக்கும் நியூகினியின் தென் கடற்கரைக்கும் இடையில் உள்ளது. மேற்கில் இக்கடல் தைமோர் (Timor) கடலுடன் இணைந்துள்ளது. இக்கடலைத் தோரசு நீர்ப்பிரிவு (Strait of Torres) பவளக் கடலுடன் இணைக்கிறது. கடலின் நீளம் 1278 கி.மீ. அகலம் 563 கி.மீ. ஆகும்.