செவ்வகம் நான்கு கோணங்களும் செங்கோணங்களாக உடைய நாற்கரம் (quadrilateral) செவ்வகம் (rectangle) எனப் படும். இதே போல, ஓர் இணை கரத்தில் ஒரு கோணம் செங்கோணமானால், ஏனைய கோணங்களும் செங்கோணங்களாவதால், இணை கரம் செவ்வகமாகும். செவ்வகத்தின் எதிரெதிர் முனைகளை இணைக்கும் கோடு மூலை விட்டம் எனப்படும். செவ்வகத்தின் பக்கங்களின் அளவுகள் a, b ஆனால், மூலை விட்டத்தின் அளவு \sqrt {a^2 + b^2} ஆகும். செவ்வகத்தின் பரப்பு, இரு அடுத்தடுத்த பக்கங்களின் பெருக்கலுக்குச் சமமாகும். ஒரு செவ்வகத்தின் பக்கங்கள் சமமானால், அது சதுரமாகும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> —பங்கஜம் கணேசன்