ஆன்டேரியோ
āṉṭēriyō
ஆன்டேரியோ (Ontario) கானடாவின் மாகாணங்களில் ஒன்று.
ஆன்டேரியோ (Ontario) கானடாவின் மாகாணங்களில் ஒன்று. பரப்பு : 4.12,532 ச.மைல். மக்: 45,97,542 (1951). மக்கள் நெருக்கமும் செல்வப் பெருக்கமும் மிகுந்தது. மற்ற மாகாணங்களைவிட மிகுந்த நகரங்களைக்கொண்டது. இங்குள்ள ஆட்டவா கானடாவின் தலைநகரம். இம் மாகாணத்தின் தலை நகரம் டரான்டோ. மக்: 6,73,104 (1949). இது கானடாவின் தொழிற் கேந்திரம். இங்குள்ள நயாகரா நீர்வீழ்ச்சி உலகப் புகழ் பெற்றது. உடல் நலத்திற்கேற்ற தட்பவெப்ப நிலையுள்ளது. நூற்றுக்கணக்கான ஏரிகள் உள்ளன. முக்கியமான ஆறுகள் செயின்ட் லாரன்ஸும் ஆட்டவா ஆறுமாகும். தாதுப் பொருட் செல்வம் மிகுந்த மாகாணம். தங்கம், வெள்ளி, கோபால்ட், நிக்கல், செம்பு முதலியவையும், ஏராளமான மட்டரக இரும்புக்கனியமும் உள்ளன. பெட்ரோலியமும் கிடைக்கிறது. மரப்பண்ணைத் தொழில் முக்கியமானது. இதனால் காகித உற்பத்தி பெரிய அளவில் நடைபெறுகிறது. மீன் பிடித்தலும், இதனுடன் தொடர்புள்ள தொழில்களும் முக்கியமானவை. ஓட்ஸ், கோதுமை, பார்லி முதலிய தானியங்களும் பழ வகைகளும் முக்கியமான விளைபொருள்கள். ஹாமில்டனில் மக்மாய்டர் பல்கலைக் கழகமும், கிங்ஸ்டனில் குவீன்ஸ் பல்கலைக் கழகமும், ஆட்டவாவில் ஆட்டவா பல்கலைக் கழகமும், டரான்டோவில் டரான்டோ பல்கலைக் கழகமும், லண்டனில் மேற்கு ஆன்டேரியோ பல்கலைக் கழகமும் உள்ளன.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 525)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mzxa796v/
தமிழ்“ஆன்டேரியோ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mzxa796v/APA
Oliyon Research. (2026). ஆன்டேரியோ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mzxa796v/MLA
"ஆன்டேரியோ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mzxa796v/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment