சாலிசைலிக் அமிலம்
cālicailik amilam
இதன் வேதிப் பெயர் ஆர்த்தோஹைட்ராக்சி பென்சோயிக் அமிலம்.
இதன் வேதிப் பெயர் ஆர்த்தோஹைட்ராக்சி பென்சோயிக் அமிலம். சாலிசைலிக் அமிலம் (salicylic acid) பெரும்பாலான ஆவியாகும் தைலங்களில் மெத்தில் எக்ஸ்டராக்ட் <!---- Extract----> உள்ளது. சாலிசைலால்டிஹைடு அல்லது சாலிசைல் ஆல்கஹாலை ஆக்சிஜனேற்றப்படுத்தியோ ஆர்த்தோ சல்ஃபோ பென்சோயிக் அமிலத்துடன் சோடியம் ஹைட்ராக்சைடைச் சேர்த்து உருக்கும் போதோ, சாலிசைலிக் அமிலம் உண்டாகிறது. தொழில் முறையில் இது, கோல்ப்—ஷிமிட் வினை மூலம் தயாரிக்கப்படுகிறது. சோடியம் ஃபீனாக்சைடுடன் கார்பன் டைஆக்சைடைச் சேர்த்து அழுத்தத்துடன் 120—140° C வெப்பத்தில் வினை புரியச் செய்து இது பெறப்படுகிறது.
சாலிசைலிக் அமிலம் ஒரு திண்மம்; உருகு நிலை 159°C. மருத்துவத்தில் சீழ் எதிர்ப்பியாகவும் (antiseptic), அசோ சாயங்களை உருவாக்கவும் பயன்படுகிறது.
சாலிசைலிக் அமிலத்தை வேகமாக வெப்பப்படுத்தினால், பதங்கமாகிறது; மெதுவாக வெப்பப்படுத்தினால், இதிலிருந்து கார்பன் டைஆக்சைடு வெளியேறுகிறது. சோடியம்-ஐசோபென்டனாலைச் சேர்த்து ஒடுக்கும் போது, பைமாலிக் அமிலம் உண்டாகிறது. இதனை நைட்ரோ ஏற்றம், புரோமினேற்றம் ஆகியவற்றிற்குட்படுத்தும் போது 2, 4, 6—மூபதிலீட்டுச் சேர்மங்கள் உண்டாகின்றன. இவ்வினை நீர்ம ஊடகத்தில் நடைபெற்றால் மட்டுமே கார்பாக்சில் தொகுதி நீக்கமடைகிறது; அசெட்டிக் அமிலக் கரைசலில் இவ்வாறு நடைபெறுவதில்லை.
கார்பனேட்டுகளுடன் வினைப்படுத்தும் போது, கார்பாக்சில் தொகுதி மட்டுமே உப்புகளை உண்டாக்குகிறது. ஆனால், காரத்துடன் வினைப்படும் போது, கார்பாக்சில், ஹைட்ராக்சில் தொகுதி ஆகிய இரண்டும் வினைப்பட்டு உப்புகளை உண்டாக்குகின்றன. மூட்டு வாதத்திற்குச் (rheumatism) சோடியம் சாலிசைலேட் பயன்படுகிறது. பாரா, மெட்டா அமிலங்களை விட ஆர்த்தோ மாற்றியம் (isomer) அமிலத் தன்மை மிகுந்துள்ளது.
இதன் ஒரு பெறுதி மெத்தில் சாலிசைலேட் நறுமணப் பொருளாகும். சலால் அல்லது ஃபீனைல் சாலிசைலேட் உள்சீழ் எதிர்ப்பியாகவும், ஆஸ்ஃப்ரின் அல்லது அசெட்டைல் சாலிசைலிக் அமிலம் வலி குறைப்பியாகவும் செயல்படுகின்றன. —பி. ஈ.எம்.லியாகத் அலிகான்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 143)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mw5rrzh5/
தமிழ்“சாலிசைலிக் அமிலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mw5rrzh5/APA
Oliyon Research. (2026). சாலிசைலிக் அமிலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mw5rrzh5/MLA
"சாலிசைலிக் அமிலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mw5rrzh5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment