இராட்டிரகூட அரசர்; நான்காம் கோவிந்தருக்குப் பின் முடிசூட்டிக் கொண்டவர்; நான்காம் கோவிந்தரின் தந்தை வழியில் வந்தவர். இவரை மூன்றாம் அமோகவருசபட்டிகா என்றும் கூறுவர். இவர் கி.பி. 936–இல் அரியணை ஏறினார். இவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் ஒரு சிலவே. அவற்றில் இவர் ஒழுக்க சீலர் என்றும், திரிபுரி காலச்சூரி முதலாம் கேயூரவருச யுவராசனின் மருமகன் என்றும், கங்க இளவரசர் இரண்டாம் பூதுகரின் மாமனார் என்றும் கூறப்படுகிறார். மூன்றாம் அமோகவருசர் ஆட்சி கி.பி. 940–ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் சீர்குலைந்துவிட்டது.