எடிசன், தாமஸ் ஆல்வா
eṭicaṉ, tāmas ālvā
மிகக் குறைந்த காலத்தில் மிக அதிகமான அறிவியல் கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கியவர் தாமஸ் ஆல்வா எடிசன் ஆவார்.
மிகக் குறைந்த காலத்தில் மிக அதிகமான அறிவியல் கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கியவர் தாமஸ் ஆல்வா எடிசன் ஆவார். இவர் பல்துறைப் புலமையாளராகவும் புத்தமைப்பு வல்லுநராகவும் விளங்கியவர்.
இவர் அமெரிக்காவில் உள்ள ஒஹியோ மாநில மிலான் நகரில் 1847ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் மூன்று மாதங்கள் மட்டுமே முறையாகப் பள்ளியில் கல்வி கற்றார். இவர் தன் இளமைதொட்டே புதிய பொருட்களைக் கண்டுபிடிப்பதிலேயே நாட்டமுடையவராக விளங்கினார். இதனால் எப்போதும் எதைப் பற்றியேனும் சிந்தித்துக் கொண்டே இருப்பார். இதை உணராத இவர் ஆசிரியர் இவரை மூளை வளர்ச்சி குன்றியவர் எனக் கருதினார். இதனால் இவர் பள்ளிக் கல்வியைத் தொடராது பள்ளியிலிருந்து வெளியேறிவிட்டார்.
எனினும், தமது புத்தமைப்புச் சிந்தனையையும் புதியவற்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியையும் ஆய்வையும் நிறுத்தவில்லை. ஏழ்மை வாழ்வும் இவரைப் பின்தொடர்ந்ததால் ஆங்காங்கே சிறுசிறு வேலைகளைச் செய்து வருவாய் தேடும் அதே நேரத்தில் தம் புதியன கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளையும் தொடர்ந்து செய்து வந்தார். அதன் விளைவாகப் புதிய புதிய கருவிகளைக் கண்டுபிடித்தார். மின்விளக்கு, திரைப்படம், தொலைபேசி, இசைத்தட்டுக்கருவி, தட்டச்சுப்பொறி முதலான இன்றைய வாழ்வின் இன்றியமையாக் கருவிகளாக அமைந்துள்ளவற்றைக் கண்டுபிடித்தவர் இவரே. இவர் தந்தி முறையைத் திருத்தமான முறையில் மாற்றியமைத்தார். இவர் தன் வாழ்நாள் முழுமையும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி உலகுக்கு வழங்கிக் கொண்டே இருந்தார்.
அவற்றின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேலாகும்.
மூலம் · source: இளையர் அறிவியல் களஞ்சியம் — மணவை முஸ்தபா — CC0 1.0 (public domain dedication) (பக். 103)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mtkw3wu9/
தமிழ்“எடிசன், தாமஸ் ஆல்வா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mtkw3wu9/APA
Oliyon Research. (2026). எடிசன், தாமஸ் ஆல்வா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mtkw3wu9/MLA
"எடிசன், தாமஸ் ஆல்வா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mtkw3wu9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment