அயோத்தியாசிங் உபாத்தியாயா
ayōttiyāciṅ upāttiyāyā
அயோத்தியாசிங் உபாத்தியாயா (1865-1948) இந்தி எழுத்தாளர்.
அயோத்தியாசிங் உபாத்தியாயா (1865-1948) இந்தி எழுத்தாளர். இவர் உத்தரப் பிரதேசத்திலுள்ள நிஜாமாபாத் என்னும் ஊரிற் பிறந்தார். பள்ளிப்படிப்பு முடிந்தபின் இவர் சொந்த ஊரிலேயே பள்ளி ஆசிரியரானார். அப்போது இவருக்குச் சூமர்சிங் என்ற சாதுவிடம் தொடர்பு ஏற்பட்டது. இதனால் இவருக்கு இந்தி இலக்கியத்தில் ஆர்வம் பிறந்தது. ஆங்கிலத்திலிருந்தும் உருதுவிலிருந்தும் இவர் பல நூல்களை மொழிபெயர்த்தார். பின்னர்ச் சட்டக்கல்வி பெற்று நீதிபதியாக வேலை பார்த்தார். வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின் இவர் 1923-ல் காசிப் பல்கலைக் கழகத்தில் இந்திப் பேராசிரியரானார். அகில இந்திய இந்திக் கழகம் இவருக்குப் பரிசளித்துப் பாராட்டிற்று. சமூகச் சீர்திருத்தத்திலும் இவர் ஆர்வங் கொண்டிருந்தார். உருது, பாரசீகம், வடமொழி ஆகிய மூன்றிலும் இவர் புலமை பெற்றிருந்தார். பி .வெ. ச.]]
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 180)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/msppdtre/
தமிழ்“அயோத்தியாசிங் உபாத்தியாயா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/msppdtre/APA
Oliyon Research. (2026). அயோத்தியாசிங் உபாத்தியாயா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/msppdtre/MLA
"அயோத்தியாசிங் உபாத்தியாயா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/msppdtre/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment