இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு
irumpuk kaṉi ēṟṟumati nāṭukaḷiṉ kūṭṭamaippu
இரும்புக் கனி ஏற்றுமதி செய்யும் நாடுகளிடையே ஒத்துழைப்பு நிலவ ஓர் அமைப்பு உருவாகுதற்கு 1975–ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்களில் செனிவாவில் (Geneva) ஒப்பந்தம் எழுதப்பட்டது.
இரும்புக் கனி ஏற்றுமதி செய்யும் நாடுகளிடையே ஒத்துழைப்பு நிலவ ஓர் அமைப்பு உருவாகுதற்கு 1975–ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்களில் செனிவாவில் (Geneva) ஒப்பந்தம் எழுதப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர்த் திங்கள் முதல் இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (Association of Iron Ore Exporting Countries, AlEC) உருவாக்கப்பட்டுச் செயற்படத் தொடங்கியது. ஒப்பந்தந்தை உருவாக்கிய இரும்புக்கனி ஏற்றுமதி செய்யும் நாடுகளுள் பல ‘கார்புல்’ என்னும் வணிக முற்றுரிமை நிறுவனத்தைப் போல இவ்வமைப்பும் செயற்பட வேண்டும் எனவும், உற்பத்தியிலும் விலை உறுதி செய்வதிலும் கட்டுப்பாடுகளைப் புகுத்தவேண்டும் எனவும் விரும்பின. ஆனால், ஆசுதிரேலியாவும் (Australia) சுவீடனும் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததனால், இவ்வமைப்பு ஓர் அறிவுரை வழங்கும் அமைப்பாகச் செயற்படலாயிற்று.
குறிக்கோள்கள்
1) இரும்புக் கனி ஏற்றுமதி செய்யும் நாடுகள், இரும்புக் கனி உற்பத்தி செய்தல், சுத்தம் செய்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றில் கூட்டுறவையும் ஒத்துழைப்பையும் தங்களுக்கிடையே அளித்தல். 2) இந்நாடுகளுக்கிடையே இரும்புக் கனித் தொடர்பான தொழில் நுட்ப அறிவு. வாணிக முன்- னேற்றம், இரும்புக் கனி உற்பத்தி அளவு ஆகியவற்றை மேம்படுத்துதல், 3) இவ்வமைப்பு இரும்புக் கனித் தொழில் தொடர்பான ஆலோசனைகளுக்கும் செய்திப் பரவலுக்கும் ஒரு பன்னாட்டு மையமாக விளங்குதல் ஆகியவை இவ்வமைப்பின் சிறப்புக் குறிக்கோள்களாகும்.
அமைப்பு
இவ்வமைப்பின் தலைமைச் செயலகம் செனிவாவில் நிறுவப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் மாநாடு நடைபெறுகிறது. ஆளுநர்க் குழுவும் செயலகமும் அமைப்பின் மேலாண்மைத் தொடரும் பணிகளைப் பொறுப்புடன் கண்காணிக்கின்றன. செயலகத்தின் இப்போதைய பொதுச் செயலாளர் பி.கே. சன்யால் (P.K. Sanyal) ஆவர். இப்போதைய உறுப்பு நாடுகளாவன; அல்சீரியா, ஆசுதிரேலியா, இந்தியா, சைபீரியா, மாரிட்டானியா, பெரு, சீரா லீயோன் (Sierra Leone), சுவீடன், வெனிசூலா ஆகும்.
பணிகள்
இக்கூட்டமைப்பு இரும்புக் கனித் தொழில் தொடர்பானவற்றில் பல ஆராய்ச்சிகள் நடத்தி வருகிறது. ஆய்வு முடிவுகள் அறிக்கைகளாகவும், புள்ளிவிவரங்களாகவும், அறிவுரைகளாகவும், பரிந்துரைகளாகவும் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படுகின்றன. இத்தகைய வெளியீடுகள் பல 1980-ஆம் ஆண்டிலிருந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இரும்புக் கனிப் புள்ளிவிவரத் தொகுப்பு (Bulletin) தனியாகத் தொடர்ந்து இவ்வமைப்பால் வெளியிடப்படுகின்றது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 226)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mpdmmabf/
தமிழ்“இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mpdmmabf/APA
Oliyon Research. (2026). இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mpdmmabf/MLA
"இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mpdmmabf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment