வாய்

vāy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிரினங்கள் தம் உடலுக்குத் தேவையான உணவும் நீரும் உட்கொள்ளும் உடற்பகுதி. — mouth, mouthful, opening of bag, etc
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாய்)
2.
இது மாந்தரின் உடலின் உணவுப்பாதையின் தொடக்கப் பகுதி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாய்)
3.
ஒலியெழுப்ப, மொழி பேசப் பயன்படும் உறுப்பு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாய்)
4.
புண்ணின் வாய் (புண்ணின் திறந்துள்ள பகுதி; பாம்பு முதலிய கடித்துவிட்டால் கடிபட்ட இடம், கடிவாய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாய்)
5.
ஏதொன்றும் தொடங்கும் இடம், தோற்றுவாய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாய்)
6.
பானை, ஏனம், பாத்திரம் போன்றவற்றின் திறந்த பகுதி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாய்)
7.
ஒன்று தற்செயலாக நிகழ்வதைக் குறிக்கும் வினை, வாய்த்தல் என்னும் வினை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாய்)
8.
இடம், வடு, உண்மை வாக்கு, துவாரம், வாயில், விளிம்பு, மூலம் நுனி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 374)
9.
வழி, (குறள் 948); வாய், (குறள் 91, 159, 415, 420, 423).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 194)
10.
1. கன்னங்களுக்குள் அமைந்துள்ள வாய்க் குழிவு. இதில் நாக்கு, பற்கள், வன்மையான மற்றும் மென்மையான அண்ணம், தொண்டை ஆகியவை அடங்கியுள்ளன. 2. ஒர் உட்குழவின் அல்லது குழாயின் திறப்பு வழி — mouth
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 702)
11.
பிறப்புறுப்புப் பகுதி தொடர்பான — orogenital
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பிறப்புறுப்பு சார்ந்த · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 774)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mp9p8c5b/

தமிழ்
“வாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mp9p8c5b/
APA
Oliyon Research. (2026). வாய். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/mp9p8c5b/
MLA
"வாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mp9p8c5b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment