இசுகாட்லாந்து (Scotland) மன்னர்; கி.பி. 1198–இல் ஏடிங்டனில் (Haddington) பிறந்தார்; கி.பி. 1214–இல் தம் தந்தை வில்லியத்திற்குப் பின் பட்டமேற்றார். இங்கிலாந்து மன்னன் சானிற்கு (John) எதி- ராகப் பிரெஞ்சு அரசர் லூயியிடம் நட்புக் கொண்டு சானைப் பகைத்துக்கொண்டார். சான் இசுகாட்லாந்தின்மீது படையெடுத்து எல்லைப்புறங்களில் நாசத்தை விளைவித்தார். அலெக்சாந்தர் கி.பி. 1217–இல் சானின் மகளான சோவானாவை மணந்ததன் விளைவால் இங்கிலாந்துடன் நட்பு ஏற்பட்டது. மூன்றாம் என்றியின் ஆட்சியில் கி.பி. 1244–இல் நியூகாசிலில் நடந்த உடன்படிக்கையின்படி, ஆங்கிலேய மன்னருக்கெதிரான செயல்களில் ஈடுபடுவதில்லை என்று இவர் ஒப்புக்கொண்டார். கி.பி. 1244–இல் இவர் இறந்தார்.