கொழுத்த வழங்கன்
koḻutta vaḻaṅkaṉ
பொருள்கள் · Senses
1.
ஒரு கிளையன்/வழங்கன் கட்டமைப்பில் செயல்படும் வழங்கன் கணினி. ஏறத்தாழ அனைத்துச் செயலாக்கப் பணிகளையும் வழங்கன் கணினியே மேற்கொள்ளும். கிளையன் மிகச் சில பணிகளையே செய்யும். அல்லது எப்பணியும் செய்யாது. பயன்பாட்டு நிரல்கள் மற்றும் தகவல், வழங்கன் கணினியிலேயே இருக்கும். தகவலைப் பெற்று வெளியிடும் பணியையே கிளையன் செய்யும். tatware : கொழுத்த மென்பொருள் : திறனற்ற மோசமான வடிவமைப்பு, அரிதாகப் பயன்படுத்தப்படும் ஏராளமான தேவையற்ற வசதிகள் இவற்றின் காரணமாக, நிலைவட்டில் அதிகமான இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் மென்பொருள். fault tolerance level : பழுது தாங்கு திறன் மட்டம்: பழுது சகிப்பு நிலை. favorite : கவர்வி; ஈர்ப்பி; விருப்ப மான விருப்பத் தளங்கள்; விரும்பு பக்கம் : இணையத்தில் பயனாளர் ஒருவர் அடிக்கடி விரும்பிப் பார்க் கும் வலைப்பக்கம், மைக்ரோ சாஃப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோர ரில் இவ்வாறு அழைக்கப்படுகிறது. அடிக்கடி பார்க்க விரும்பும் பக்கத்துக்கு ஒரு குறுவழியை (Shotcut) பயனாளர் தாமாகவே அமைத்துக் கொள்ள முடியும். நெட்ஸ்கேப் நேவிக்கேட்டரில் இத்தகைய பக்கத்துக்கு புத்தகக் குறி (Book Mark) என்று பெயர். favourites folder கவர்விகள் கோப்புறை : அடிக்கடி பார்க்க விரும் பும் வலைப்பக்கங்களுக்கான குறு வழிகளடங்கிய கோப்புறை. மைக்ரோசாஃப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் இத்தகைய பெயர். பிற உலாவிகளில் புத்தகக் குறிகள் (Book Marks), சூடான பட்டியல் (Hotlists) என்று வேறுபல பெயர் களில் அழைக்கப்படுகின்றன. fax programme : தொலை நகலி செயல்முறை; தொலை நகலி கட்ட ளைத் தொடர் தொலை நகலி நிரல். tax server : தொலை நகல் வழங்கன். ஒளிக்காட்சி (Video) பயன்பாடுகளில் எஃப் இணைப்பிகள் பெருமளவு பயன்படுத்தப்படும் ஒர் இணையச்சு (Coaxial) இணைப்பி. இணைக்கும்போது திருப்பாணி (Screw) ஒன்று தேவை. FDDI எஃப்டிடிஐ : ஒளியிழை பகிர்ந்தமை தரவு இடைமுகம் என்று பயன்படும் Fiber Distributed Data Interface என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அதி வேக ஒளியிழை குறும்பரப்புப் பிணையங்களுக்காக அமெரிக்க தேசிய தரக்கட்டுப் பாட்டு நிறுவனம் (ANSI) உருவாக்கிய செந்தரம். வில்லை வளைய (Token Ring) கட்ட மைப்பில் அமைந்த பிணையங்களில் வினாடிக்கு 100மெகா துண்மிகள் (மெகாபிட்ஸ்) வீதம் தகவல் பரிமாற்றம் செய்வதற்கான வரை யறுப்புகள் இதில் அடங்கியுள்ளன. எஃப்.டி.டி.ஐ-l என்பது எஃப்.டி.டிஐ-ன் நீட்டித்த வடிவமாகும். நிகழ்நேரத் தகவல் பரிமாற்றத்தில் தொடர் முறைத் தகவலை இலக்கமுறைத் தகவல் வடிவத்தில் அனுப்புவதற் குரிய கூடுதலான வரையறுப்புகள் இதில் உள்ளன. FDM : எஃப்டிஎம் : அலைப்பகிர்வுச் சேர்ப்புமுறை என்று பொருள்படும் Frequency Division Multiplexing group சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தகவல் சமிக்கைகளை வெவ்வேறு அலைவரிசைக்கு மாற்றிப்பின் அனைத்து அலைவரிசைகளையும் ஒற்றை அலைக் கற்றையாக்கி ஒரே தகவல் தடத்தில் அனுப்பிவைக்கும் முறை. அடிக்கற்றைப் (Baseband) பிணையங்களிலும், தொலைபேசி வழித் தகவல் தொடர்பிலும் தொடர் முறை (Analog) சமிக்கைப் பரி மாற்றத்திலும் எஃப்டிஎம் பயன்படு கிறது. எஃப்டிஎம் முறையில் தகவல் தடத்தின் அலைக்கற்றை சிறுசிறு கற்றையாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கற்றையும் ஒரு தகவல் சமிக்கைகளை ஏந்திச் செல்லும். Federal Information Processing Standards : கூட்டரசின் தகவல் செயலாக்கத் தரங்கள் : அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசாங்க அமைப்புகளுக்குள் நடைபெறும் தகவல் செயலாக்கத்திற்கான வழி காட்டுதல்களும் தொழில்நுட்ப வழி முறைகளும் அடங்கிய செந்தரக் கட்டுப்பாடு. federal database : கூட்டிணைப்புத் தரவுத் தளம் : ஒரு குறிப்பிட்ட துறைபற்றிய அல்லது சிக்கல் பற்றிய தத்தம் கண்டுபிடிப்புகளையும் பட்டறிவையும் அறிவியல் அறிஞர் கள் சேமித்து வைத்துள்ள ஒரு தரவுத் தளம். ஒரு தனி மனிதரால் தீர்க்க முடியாத அல்லது தீர்ப்பதற்குக் கடினமான சிக்கல்களுக்குத் தேவை யான அறிவியல் கலந்தாய்வுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது கூட்டிணைப்புத் தரவுத் தளம். Federation of American Research Networks : அமெரிக்க ஆராய்ச்சிப் பிணையங்களின் கூட்டமைப்பு அமெரிக்க நாட்டிலுள்ள பிணையங் களின் இணைப்புத் தொழில்நுட்பக் குழுமங்களை ஒன்று சேர்த்து உரு வாக்கப்பட்ட ஒரு லாப நோக்கில்லா சங்கம். கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொடர்புடைய சமூகங்களிடையே பிணையங்களை ஒருங்கிணைப்பதை தேசிய அளவில் முக்கியமாக வலியுறுத்தும். feedback:நிலையறிதல்; பின்னூட்டம். feed, card : அட்டை செலுத்தம். feed, vertical செங்குத்துச் செலுத்தம், காந்த ஆக்கப் பொருள்; நேர்காந்த ஆக்கப் பொருள்: மிகுகாந்தப் பண்பு பெறக்கூடிய பொருள். மின்னணுத் துறையில் பரவலாகப் பயன்படுத் தக்கூடிய பொருள். எஃகு மற்றும் தூளாக்கப்பட்ட இரும்பு ஆகியவை. மின்துண்டி (Inductor)களின், துண்டல் திறனை அதிகரிக்க, அவற்றின் சுருள்மையமாய்ப் பயன்படுகிறது. நெகிழ்வட்டு, நிலைவட்டு மட்டும் காந்த நாடாக்களில் மேல்பூச்சுக்குப் பயன்படுகிறது. fi : எஃப்ஐ இணையத்தில் ஃபின் லாந்து நாட்டைச் சேர்ந்த இணைய தளம் என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர். field programmable logic array : புல நிரலாக்க தருக்கக் கோவை : ஒரு வகையான ஒருங்கிணை மின்சுற்று (IC). இதில் தருக்க மின்சுற்றுகளின் (logic circuits) கோவை இருக்கும் . தனித்த மின்சுற்றுகளிடையே இணைப்புகளையும், அதன்மூலமாக கோவையின் தருக்கச் செயல்முறை களையும் நம் விருப்பப்படி நிரலாக்கம் செய்ய முடியும், தயாரிப் புக்குப் பிறகு, குறிப்பாக அவற்றைக் கணினிகளில் நிறுவும் நேரத்தில் நிரலாக்கம் செய்யலாம். இத்தகைய நிரலாக்கத்தை ஒரேயொரு முறை மட்டும் செய்ய முடியும். சிப்புவின் இணைப்புகளிடையே மிக அதிக மின்சாரத்தை செலுத்தி இத்தகைய நிரலாக்கத்தைச் செய்வர். file codes : கோப்புக் குறிமுறைகள். file compression : கோப்பு சுருக்கம்; கோப்பு அழுத்தம்; கோப்பு இறுக்கம்: ஒரு கோப்பினை வேறிடத்துக்கு அனுப்பி வைக்க அல்லது சேமிக்க அதன்அளவைச்சுருக்கும் செயல்முறை. file file control block : கோப்பு கட்டுபாட்டுத் தொகுதி : ஒரு கணினியின் இயக்க முறைமை, திறந்து வைக்கப் பட்ட ஒரு கோப்பு பற்றிய விவரங் களைப் பதிவுசெய்து வைத்துக் கொள்வதற்கு தற்காலிகமாக ஒதுக்கப்படும் நினைவகப் பகுதி. file dump : கோப்பு தினிப்பு file open : கோப்புத் திறப்பு file recovery : கோப்பு மீட்பு இழப்பு போன அல்லது படிக்க முடியாத வட்டுக் கோப்புகளை மீட் டெடுக்கும் செயல்முறை. பல்வேறு காரணங்களினால் கோப்புகள் தொலைந்து போகலாம். கவனக் குறைவாக அழித்துவிடல், கோப்பு பற்றி எழுதி வைக்கப்பட்டுள்ள விவரங்களுக்கு பாதிப்பு ஏற்படல், வட்டு பழுதடைதல் போன்ற காரணங்களினால் நாம் கோப்பு களை இழக்க நேரிடுகிறது. ஒரு கோப்பினை அழிக்கும்போது அதன் விவரங்கள் அழிக்கப்படுவதில்லை. அந்த இடம் பிற கோப்புகளுக்குக் கிடைக்கும். கோப்பு விவரங்கள் எழுதப்பட்ட இருப்பிடங்களை அடையாளம் காணமுடிந்தால் ஒட்டு மொத்தக் கோப்பையும் மீட்டுவிட முடியும். பழுதான கோப்புகளைப் பொறுத்தமட்டில், வட்டில் குறிப் பிட்ட பகுதியில் இருக்கும் விவரத் தைப் படித்து வேறொரு வட்டில் அல்லது கோப்பில் ஆஸ்கி (ASCII) அல்லது இரும/பதினறும எண்ணுரு வில் எழுதிக்கொள்ளும் நிரல்கள் உள்ளன. எனினும் இந்த முறையில் மூலத்தகவலை அப்படியே பெறு வது இயலாது. இழந்த கோப்புகளை மீட்பதற்குச் சிறந்த வழிமுறை அவற்றை காப்பு நகலிலிருந்து (Backup) பெற்றுக் கொள்வதேயாகும். file fragmentation கோப்புக் கூறாக்கம் : 1. ஒரு கோப்பின் விவரங் கள் வட்டில் தொடர்ச்சியாக எழுதப் பதியப்பட்டுள்ளது என்கிற விவரம் ஒர் அட்டவணையில் எழுதப்படு கிறது. இதன் காரணமாய் வட்டில் எழுதப்படாத இடங்களும் தொடர்ச்சியாக இருப்பதில்லை. வட்டு நிறைந்து போகின்ற நிலை யில் கோப்பினை எழுதவும் படிக் கவும் அதிக நேரம் ஆவதுண்டு. இவ்வாறு கூறுகளாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்களை ஒரளவு வரிசையாக எடுத்தெழுது வதற்கென பயன்பாட்டு நிரல்கள் உள்ளன. 2. ஒரு தரவுத் தளத்தில் அட்டவணைக் கோப்பில் (Tables) ஏடுகள் (Records) வரிசையாகப் பதிவு செய்யப்படுவதில்லை. அவ்வப்போது ஏடுகளை அழிக்கிறோம், சேர்க் கிறோம். இதனால் ஏடுகள் கூறாகிக் கிடக்கும். ஆனால் பெரும்பாலான தரவுத் தள தொகுப்புகளில் ஏடுகளை வரிசைப்படுவதற்கென பயன்பாட்டு நிரல்கள் உள்ளன. file retrieval : கோப்புக் கொணர்தல் : ஒரு தகவல் கோப்பினை, சேமித்து வைக்கப்பட்ட இடத்திலிருந்து அதனைப் பயன்படுத்த விருக்கும் கணினிக்குக் கொணரும் நடவடிக்கை. file sharing : கோப்பு பகிர்வு: பிணையங்களில் மையக் கணினி அல்லது வழங்கன் கணினியில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட கோப்பினைப் பல்வேறு பயனாளர் களும் ஒரே நேரத்தில் பார்வையிட, திருத்த, வசதி இருக்க வேண்டும். இவ்வாறு ஒரே நேரத்தில் ஒரு கோப்பினை பலர் கையாள்வது கோப்புப் பகிர்வு எனப்படுகிறது. ஒரே நேரத்தில் வேறுவேறு நிரல்கள் அல்லது வேறுவேறு கணினிகள் பயன்படுத்துகின்றன எனில் கோப்பு விவரங்கள் அதற்கேற்ற வடிவாக் கங்களில் மாற்றப்பட்டு அளிக்கப் பட வேண்டும். ஒரு கோப்பு, பல ராலும் கையாளப்படுகிறதெனில் அக்கோப்பினை அணுகுவது, நுழை சொல் (P6assword) பாதுகாப்பு மூலம் ஒழுங்குப்படுத்தப்படவேண்டும். ஒரே நேரத்தில் ஒரு கோப்பினை ஒன்றுக்கு மேற்பட்டோர் திருத்த முடியாதவாறு கோப்புப் பூட்டு முறை (File lock) இருக்க வேண்டும்.
— fat server
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mgqyvqb9/
தமிழ்“கொழுத்த வழங்கன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mgqyvqb9/APA
Oliyon Research. (2026). கொழுத்த வழங்கன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mgqyvqb9/MLA
"கொழுத்த வழங்கன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mgqyvqb9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment