இடையம்
iṭaiyam
பொருள்கள் · Senses
1.
வலையம், மின்தளம், இணையத்தின்மிகக்கவர்ச்சியுள்ளதும் பார்க் கக்கூடியதுமான பகுதி இடையம். இதன் விரிவு உலகளாவிய இடையம் (www). இது மீப் பெருந்தகவல் திரட்டு ஆகும். இதில் இலட்சக்கணக்கான பக்கங்கள் உள்ள தகவல்கள் இருக்கும். இப்பக்கம் இணையப்பக்கம் (வெப்பேஜ்) எனப்படும். இப் பக்கத்தில் பாடம் படம், ஒலி, ஒளி ஆகியவை இருக்கும். இப்பக்கங்கள் ஏனைய பக்கங்களோடு தொ டர்பு கொண்டிருக்கும். ஒன்றுடன் மற்றொன்று தொடர்பு கொள்ளும் பக்கங்களின் தொகுதி இடையத்தளம் (வெப்சைட்) எனப்படும். இத்தளத்தின் முதல் பக்கம் தொடக்கப் பக்கம் (ஹோம் பேஜ்) எனப்படும். இத்தொடக்கப் பக்கம் தளம் மற்றும் பிறபக்கங் களுடன் உள்ள இணைப்புகள் பற்றிய தகவல்களைக் கொண்டிருக்கும். இந்த இணைப்புகளை அழுத்த, ஏனைய பக்கங்களைப் பார்க்கலாம். ஒவ்வொரு இடையப் பக்கத்திற்கும் ஒரு தனித்த முகவரி உண்டு. இதற்கு ஒருசீர் மூல இடங்காணி என்று பெயர் (யூ.ஆர் எல்). இந்த யூஆர்எல் அஞ்சல் முகவரி போன்றது. இம்முகவரியில் நகரம், குடியிருப்பு, தெரு, வீட்டு எண் முதலிய அமைந்து, நம் வீட்டின் இருப்பிடத்தைக் காட்டும். அதேபோல், யூஆர் எல்லும் இணையத்தில் பக்கம் இருக்குமிடத்தைக் காட்டும் எ-டு. http://www.yahoo.com. இணையத்தில் தகவல் காண்பதற்கு மேய்தல் என்று பெயர். இதை மேலோட்டம் விடல் என்றுங் கூறலாம். இதைச் செய்யுங் கருவி மேய்வி. இம் மேய்வி ஒரு தனி நிகழ்நிரல் ஆகும். இடையத்திலிருந்து தகவல் பெற உதவுவது. இதற்கு எடுத்துக்காட்டுகள் இரண்டு கூறலாம். இணைய ஆராய்வி, நெட்ஸ்கேப் செலுத்தி. இவ் விரண்டில் முன்னது விண்டோஸ் 98 இன் பகுதியாகக் கிடைக்கும். பின்னது முன்னதைப் போன்றது; பரவலாகப் பயன்படுவது. பா. internet.
— web
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mgae7wj9/
தமிழ்“இடையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mgae7wj9/APA
Oliyon Research. (2026). இடையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mgae7wj9/MLA
"இடையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mgae7wj9/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment