சாராய ஈரல் நோய், அழற்சி
cārāya īral nōy, aḻaṟci
நாட்பட்ட கல்லீரல் நோய்க்கு, மிகையாக மது அருந்துவதே தலையாய காரணமாகும்.
நாட்பட்ட கல்லீரல் நோய்க்கு, மிகையாக மது அருந்துவதே தலையாய காரணமாகும். மிகை மதுவால் உண்டாகும் கல்லீரல் சுருக்க நோயால் மரணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆல்கஹால், நேரடியாகவே கல்லீரலைப் பாதிக்கிறது எனவும், உணவு ஊட்டக் குறைவு ஏற்பட்ட பின்னரே கல்லீரலைத் தாக்குகிறது எனவும், மதுவுக்கும், கல்லீரல் நோய்க்கும் உள்ள உறவு பற்றி இரண்டு கோட்பாடுகள் உள்ளன.
டிஹைட்ரோஜிளேஸ் ADH என்ற நொதியால் ஆல்கஹால், அசெட்டால்டிஹைடாக மாறுவதுதான் முதல் படியாகும். பின்னர், மைட்டோகாண்டிரிய நொதியான அசெடால்டிஹைடு டிரைஹட்ரோஜினேசால், அசெடால்டிஹைடு அசெடேட்டாக மாறுகிறது. மிகச் சிறிய அளவில் ஆல்கஹால் கல்லீரலின் நொதிகளால் வளர்சிதை மாற்றம் அடைகிறது.
ஆல்கஹாலின் வளர்சிதை மாற்றத்தால், கல்லீரலின் சைடோசாலிலும், மைட்டோகாண்டிரியா விலும் ரிடாக்ஸ் மட்டம் அதிகரிக்கிறது. இதனால் பின்வரும் விளைவுகள் உண்டாகின்றன. 1. லாக்டேட்—பைருவேட் விகிதம் அதிகரித்து, மிகை குருதி லாக்டிக் அமில நிலையும், மிகை குருதி யூரிக் அமில நிலையும் உண்டாகும். 2. குளூக்கோஸ் புதிதாக உற்பத்தியாவது குறைவதால், குறை குருதி குளுக்கோஸ் நிலை தோன்றும். 3, பீட்டா ஹைட்ராக்சி பியூட்ரேட்—அசெட்டோ அசெட்டிக் அமில விகிதம் அதிகரித்து, அமில மிகை நிலை உண்டாகிறது. 4. சிட்ரிக் அமில வட்டம் மட்டுப்படுவதால், கொழுப்பு அமில ஆக்சிஜனேற்றம் குறைந்து, கல்லீரலில் கொழுப்புத் தேக்கமடைகிறது. சில சமயம் வயிற்று வலியும், குறைந்த அளவில் குருதிச் சிதைவு சோகையும் (Zieve's syndrome) உண்டாகலாம். மேலும் கல்லீரலில் கொழுப்பு மிகையாகப் படிவதால், கல்லீரல் வீங்கி காமாலை, பசி இன்மை, சோர்வு, இறுதியாகக் கல்லீரல் தளர்வு உண்டாகலாம். நுரையீரல் அழற்சி, கணைய அழற்சி, சிறுநீரக அழற்சி தோன்றலாம்.
ஆய்வு முடிவுகள். குளுடாமிக் ஆக்ஸலோ அசெட்டிக் டிரான்ஸ்மினேஸ் அளவு அதிகரிக்கிறது. காமா குளுட்டாமைல் டிரான்ஸ்பெப்டிசேஸ், சோடியம் புரோமாப்தலின், பிலிரூபின் அல்கலைன் பாஸ்ஃபட்டேஸ் ஆகியவையும் குருதியில் மிகுதியாகக் காணப்படுகின்றன.
தீவிர ஆல்கஹால் கல்லீரல் அழற்சியில், கல்லீரல் வீக்கம், கல்லீரலில் தொடுவலி, மஞ்சள் காமாலை, தோலில் சிலந்தி போன்ற குருதி நாள மாற்றங்கள், காய்ச்சல், மகோதரம், மூளை அழற்சி, இரைப்பை—சிறுகுடலில் இரத்தப் பெருக்கு ஆகியவை உண்டாகின்றன. கல்லீரலில் சீழ்க் கட்டியும் தோன்றலாம். குருதி வாந்தியும் உண்டாகலாம். உணவுக் குழலின் சிரைகளிலிருந்து குருதிப் பெருக்கு உண்டாகும்.
தீவிர ஆல்கஹால் கல்லீரல் ஆய்வு முடிவுகள். பிலிரூபின் 17.8 மி. கி./டெசி லி; அல்புமின் 2.4 கி/டெசிலி; புரோத்திராம்பின் 47%, வெள்ளணுக்களின் எண்ணிக்கை 15,700/கன மி.மீ.; கிரியாடினின் 1.3 மி. கி. /டெசி.லி; ஹீமோகுளோபின் 10.8 கி/டெசி. லி.
இந்நோயின் சிக்கல்களாக, கல்லீரல் சிரையின் குருதிமிகு அழுத்தம், மகோதரம், நுண்ணுயிர் உதரவுறை அழற்சி, கல்லீரல் சார்ந்த மூளை அழற்சி, கல்லீரல் சார்ந்த சிறுநீரக நோயியம் தோன்றலாம்.வெள்ளணுக்களின் எண்ணிக்கை 7000க்கு மேல் அதிகரித்தாலும், கிரியாடினின் 0.6 மி.கிராமுக்கும அதிகரித்தாலும், குருதியில் பிலிரூபின் 7மி. கிராமுக்கும் அதிகரித்தாலும் நோயாளி சீரடைவது கடினம்.
மருத்துவம். கார்டிகோஸ்டீராய்டுள், புரோப்பைல் தையோயூரசில், பெனிசிலமைன், கால்சிசின், குளுக்கான், இன்சுலின் போன்றவை மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன. குருதியில் மொத்தப் புரதம் 0. 3 கிராம்/டெசி லி. அதிகமாக இருந்தால், புரோத்திராம்பின் 15% க்கும் அதிகரித்தால், டிரை அயோடதைரோனின் 80 நானோ. கி/மி.லி. அதிகரித்தால், நோயாளி சீரடையக் கூடும். —அ. கதிரேசன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 127)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m93zjct4/
தமிழ்“சாராய ஈரல் நோய், அழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/m93zjct4/APA
Oliyon Research. (2026). சாராய ஈரல் நோய், அழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m93zjct4/MLA
"சாராய ஈரல் நோய், அழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/m93zjct4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment