ஒறு நிலை முனை அடி
oṟu nilai muṉai aṭi
பொருள்கள் · Senses
1.
அடிக்கும் வட்டத்திற்குள்ளே, பந்து ஆடப்படும் பொழுது தடுக்கும் குழுவினரில் யாராவது ஒருவர் தவறிழைத்தால், அதற்குத் தண்டனையாக, கடைக் கோட்டில் ஏதாவது ஒரு பக்கத்தில், இலக்குக் கம்பத்திலிருந்து 10 கெச தூரத்திற்கு அப்பால் கடைக் கோட்டின் ஓரிடத்தில் பந்தை வைத்து, எதிர்க்குழுவினரில் ஒருவர் அடித்தாடித் தொடங்குவதைத் தான் ஒறுநிலை முனை அடி என்கிறோம். ஒறு நிலை முனை அடியை அடிப்பவரைத் தவிர மற்ற தாக்கும் குழு ஆட்டக்காரர்கள் எல்லோரும் அடிக்கும் வட்டத்திற்கு வெளியே கால்களும் கோல்களும் இருப்பது போல நிற்க வேண்டும். தடுக்கும் குழுவைச் சேர்ந்த 6 ஆட்டக்காரர்கள் மட்டும் பந்து இருக்கும் இடத்திலிருந்து 5 கெஜத்திற்கு அப்பால், கடைக் கோட்டிற்குப் பின்னால் நிற்க வேண்டும். மற்ற 5 தடுக்கும் குழு ஆட்டக்காரர்களும் அந்த முனை அடி எடுத்து முடியும் வரை, நடுக் கோட்டிற்கு அப்பால் நின்றுகொண்டிருக்க வேண்டும். ஒறு நிலை முனை அடியால் பந்தை நேராக இலக்கினுள் செலுத்தி வெற்றி எண் பெற முடியாது. 26.ஒறு நிலை அடி (Penalty Stroke) அடிக்கும் வட்டத்திற்குள்ளே தடுக்கும் குழுவினர்கள் தவறிழைக்கும் பொழுதும் அந்தத் தவறு நடக்கா விட்டால் அந்தப் பந்து இலக்கினுள் சென்றி குக்கக் கூடும் நிலை வருகிற பொழுது நடுவர் எதிர்க் குழுவிற்கு ஒறு நிலை அடி அடிக்கும் வாய்ப்பினை வழங்குகின்றார். இதில் தடுக்கும் குழுவின் இலக்குக் காவலனும். தாக்கும் குழு ஆட்டக்காரர் ஒருவரும் பங்கு பெறுகின்றனர். இலக்கின் முன்புறம் 7 கெஜத் துரத்தில் உள்ள புள்ளியில் பந்து வைக்கப்படுகிறது தடுக்கும் குழு ஆட்ட க்காரர் அதைத் தள்ளியோ அடித்தோ இலக்கினுள் செலுத்த முயற்சிப்பதை இலக்குக் காவலன் தடுத்திடும் முயற்சியில் இருக்கிறார். மற்ற எல்லா ஆட்டக்காரர்களும் 25 கெஜக் கோட்டி ற்கு அப்பால் நின்று கொண்டிருக்க வேண்டும். பந்து அடிக்கப்படும் வரை, இலக்குக் காவலன் தனது கால்களை அசைக் காமல் நிற்க வேண்டும். அடிப்பவரும் அடிப்பது போல் பாவனை செய்யாமல், நடுவர் விசில் ஒலிக்குப் பிறகு உடனே அடிக்க வேண்டும் வெற்றி எண் பெற்றால் நடுக்கோட்டிலிருந்து ஆட்டம் தொடரும். இல்லையென்றால் 16 கெஜத் தூரத்தில் பந்தை வைத்து தடுக்கும் குழுவினர் பந்தை அடித்தாடி, ஆட்டத்தை தொடருவார்.
— Penalty Corner
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m7jfmc27/
தமிழ்“ஒறு நிலை முனை அடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m7jfmc27/APA
Oliyon Research. (2026). ஒறு நிலை முனை அடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m7jfmc27/MLA
"ஒறு நிலை முனை அடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m7jfmc27/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment