சிரீலங்காவில் உள்ளதோர் ஆறு. இதனைத் தாமிரபருணி என்றும் கூறுவர். இவ்வாற்றின் நுழைவாயிலில் சிரீலங்காவின் துறைமுகப்பட்டினம் இருந்தது. தாம்ரபன்னி அல்லது தாம்பன்னி என்பது பண்டைக் காலத்தில் சிரீலங்காவிற்கு வழங்கப்பட்ட பெயர். இப்பெயருக்கும் தாமிரபருணி ஆற்றிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடும் ஆறு தாமிரபருணி என்பதாகும். அப்பெயரே சிரீலங்காவிற்கும், அருவி ஆற்றின் வாயிலில் இருந்த துறைமுகத்திற்கும் சூட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.