பச்சைக் கிளி
paccaik kiḷi
இப்பறவை சிட்டாசிடே வகுப்பிலும், சிட்டாசிஃபார்ம் வரிசையிலும் அடங்கும்.
இப்பறவை சிட்டாசிடே வகுப்பிலும், சிட்டாசிஃபார்ம் வரிசையிலும் அடங்கும். இதில் ஏறக் குறைய 300 வகைகளும், 75–80 பேரினங்களும், ஆறு துணை வகுப்புகளும் காணப் படுகின்றன. இந்த ஆறு துணை வகுப்பில் ஒன்றாகிய சிட்டாசினே என்பதே உண்மையான பச்சைக் கிளியாகும்.
பச்சைக் கிளியில் 60 பேரினங்களும், 220 வகைகளும் காணப் படுகின்றன. உலகம் முழுவதும் வெப்பமான பகுதிகளில் இது மிகுந்துள்ளன. இக்கிளியின் அலகு குட்டையாகவும், சிறியதாகவும், தடிமனாகவும்,மேல் பகுதியில் கொக்கி போன்றும் காணப் படும். நாக்குப் பகுதி கூர்மையற்று மழுங்கிக் காணப் படும். இந்த அலகு கொட்டை, விதை, காய், கனி, முதலியவற்றை உண்பதற்கு ஏற்றவாறு காணப் படுகிறது.
பச்சைக் கிளி 33 செ.மீ. நீளம் வரையில் வளரக் கூடியது. சுறுசுறுப்பான இக்கிளி 80 ஆண்டு கூட வாழும் தன்மையுடையது. பச்சைக் கிளியின் இறகு பெரும்பாலும், பச்சை நிறமாகக் காணப் படும். மேலும் ஆஃபிரிக்காவில் காணப் படும் சாம்பல் நிற பச்சைக் கிளி பேசும்
தன்மை உடையது. மேலும் இதன் ஆண் கிளி மனிதர் குரலை ஒத்த ஒலியினை உண்டாக்கும் இயல்பும் கொண்டது. வால் பகுதி சிவப்பு நிறத்திலும், முகம் வெள்ளை நிறத்திலும் காணப் படும். இரு பால் கிளிகளும் ஒரே தோற்றம் பெற்றிசூக்கும். சில கிளிகள் பயிர்களுக்கு மிகுந்த அழிவை ஏற்படுத்தும்.
அமேசான் பச்சைக் கிளி 25–40 செ.மீ. நீளம் வளரும் தன்மையுடையது. இது குட்டையான, பிரிந்த வால் பகுதியைக் கொண்டது. இந்தக் கிளியின் இறகுகளில் பச்சை நிறத்தை தவிர, மேலும் சில வண்ணங்கள் காணப் படும். இரு பால் கிளிகளும் ஒரே வகைத் தோற்றமுடையன. இந்தக் கிளி, மேற்கிந்தியத் தீவுகள், மெக்சிகோ, தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் காணப் படுகிறது. நீல வண்ண முன் பக்கமுடைய பிரேசிலில் காணப் படும் ஒரு வகைப் பச்சைக் கிளியின் மேற்பகுதி ஊதா நிறமாகவும், முகம் மஞ்சள் நிறமாகவும், தோள் சிவப்பு நிறமாகவும் காணப் படும். மேலும், பச்சை நிற மியோப்சிட்டா மோனாசஸ் என்னும் ஒரு வகை,தென் அமெரிக்காவில் காணப் படுகிறது. இதன் சிறப்புப் பண்பு மிகவும் நீளமான கூடு கட்டும் வழக்கமாகும்.
அருகி வரும் இனமான இரவுப் பச்சைக் கிளி, (Geopsittacus occidentalis <!---- See: https://en.wikipedia.org/wiki/Night_parrot ---->) ஆஸ்திரேலியாவில் மிகுந்து காணப் படுகிறது. இது புல்லின் விதை, பூச்சி ஆகியவற்றை உண்ணும் தன்மையுடையது. இதன் கூட்டின் முன் புறம் குடை போன்று காணப் படும்.
பச்சைக் கிளி, முட்டையிட்டுத் குஞ்சு பொரிக்கும் தன்மையுடையது. வெண்மையான வட்ட வடிவமான முட்டையை, மரப் பொந்துகளிலோ, துளைகளிலோ இடும். இக்கிளி சிட்டகாசிணுஸ் (psittacosis) எனும் வைரஸ் நோயினைப் பரப்பும் தன்மை கொண்டது. இந்நோய் ஏனைய பறவைகளுக்கும் தொற்றும் வாய்ப்புண்டு. —அ. சிவானந்தம்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 393)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m3qcmy46/
தமிழ்“பச்சைக் கிளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/m3qcmy46/APA
Oliyon Research. (2026). பச்சைக் கிளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m3qcmy46/MLA
"பச்சைக் கிளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/m3qcmy46/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment