அகாரசாதகம் என்பது கருநாடக இசையைப் பயிற்சி செய்யும் முறைகளுள் ஒன்றாகும். சுரவரிசைகள் அ, இ, உ, எ, ஒ, என்னும் உயிர் எழுத்துக்களைக் கொள்வதும், “ம்” எனும் ஒலியில் பயிற்சி செய்வதும் அகாரசாதகம் எனப்படும். இது குரல் வளத்திற்காகச் செய்யப்படும் முறையாகும். கமகங்கள் தெளிவாகத் தெரியுமாறு பாடுவதற்கும் மத்திம கால சுரவரிசைகள் குரலில் ஒலிப்பதற்கும் அகாரசாதகம் முக்கியமாகும். அகாரசாதகத்தினால் குரலுக்கு அழுத்தமும் வலிமையும் ஏற்படும். எ.டு. கபதச ............ என்னும் சுர வரிசையை அஅஅஅ ...... என்றும், ரிகமப என்னும் சுரவரிசையை இஇஇஇ ............ என்றும் பாடிப் பயிற்சி செய்யும் முறையைக் குறிப்பிடலாம்.