நெட்டிலிங்கம்
neṭṭiliṅkam
இதைக் கொடி மரம் என்றும் கூறுவதுண்டு.
இதைக் கொடி மரம் என்றும் கூறுவதுண்டு. இதன் தாவரப் பெயர் பாலியால்தியா லாஞ்சிஃபோலியா (Polyalthia longifolia) ஆகும். இதன் இணைப் பெயர்கள் உவேரியா லாஞ்சிஃபோலியா (Uvaria longifolia). குவாட்டேரியா லாஞ்சிஃபோலியா வகை பெண்டுலோசா (P.Longifolia var Penduosa) என்னும் மரத்தில் கிளைகள் தொங்கிக் கொண்டிருக்கும். உயரமாக வளரும் இம்மரத்தை, இந்தியா மற்றும் இலங்கை முழுவதும் பொதுவாகக் காணலாம். மும்பையில் ஏறக் குறைய ஒரு நூற்றாண்டுக் காலமாக வளர்க்கப் பட்டு வருகிறது. கிளைத்துப் பெரும் பரப்பில் படராமல் தழைத்து வளரும் இம்மரம் செங்குத்தாக வளர்வது குறிப்பிடத் தக்கது. இம்மரக்கட்டை மஞ்சள் நிறமாகவோ, மஞ்சள் கலந்த வெள்ளை நிறமாகவோ இருக்கும். இதன் மரம் மென்மையானது. இம்மரத்தில் உற்பத்தியாகும் விதைகள், ஓராண்டிற்கு நல்ல முளைப்புத் திறனுடன் இருக்கும். விதைகளைப் பாலித்தீன் பைகளில் வைத்து, நீர் ஊற்றி வளர்த்து இரண்டாண்டு நிரம்பியதும், அக்கன்றுகளை நட்டு, இம்மரத்தை இனப் பெருக்கம் செய்வது வழக்கம். பெரும்பாலும் ஜுன்–ஆகஸ்டு மாதங்களில் கன்றுகளை நடுவர்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> அமைப்பு. நெட்டிலிங்க மரம் 20 மீ. உயரமும் 1.4 மீ. பருமனும் பெற்றிருக்கும். இதன் மரப் பட்டை வழவழப்பாகச் சாம்பல் நிறத்தில்2 செ.மீ. கனமுடையது. பசுமை மாறா இம்மரத்தின் இலைகள் கண்ணாடி போன்று பளபளப்பாக இருக்கும். இலைகள், ஈட்டி வடிவில் அலை அலையான ஓரத்தைக் கொண்டிருக்கும். பூக்கள், நட்சத்திர வடிவிலும், மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும் உள்ளன. 5–6 எண்ணிக்கையில் கொத்தாக உண்டாகும். பூக்களைப் பிப்ரவரி–ஏப்ரல் மாதங்களில் காணலாம். ஒவ்வொரு பூவும் 2–5 செ.மீ. நீளமுடையது. மெல்லிய காம்புகள் கொண்ட பூக்களின், புல்லி இதழ்கள் மூன்று. அல்லி இதழ்கள் 3X3 ஒழுங்கற்றவை. மலர் இதழடி (torus) குவிந்திருக்கும். ஆப்பு வடிவான பல மகரந்தத் தாள்கள் காணப் படுகின்றன. சூலிலைகள் (carpels) பல, முட்டை போன்றவை. சூல்கள் திசுவறைக்கு ஒன்று அல்லது இரண்டு காணப் படும். காய்கள் பச்சை நிறமானவை. பழங்கள் முட்டை வடிவில் கருஞ்சிவப்பு நிறத்தில். ஒவ்வொரு பழத்திலும், ஒவ்வொரு விதையைக் கொண்டிருக்கும்.
பயன். நெட்டிலிங்கம் நிழல் தரும் மரங்களுள் ஒன்றாகும். இதன் தழை அடர் பச்சை நிறமாக நீண்டும் உள்ளமையால், விழாக்களில் எழிலூட்டப் பயனாகிறது. இம்மரம் நேராக மிக உயரமாக வளர்வதால், கொடிகள் கட்டுவதற்குப் பயன் படுகிறது. வீட்டின் முகப்புகளிலும், பூங்காக்களிலும் இம்மரத்தில் கிளைகள் தொங்கி வளரும். இதன் மரத்திலிருந்து பீப்பாய், மேளம், பெட்டி, மரப் பலகை, பென்சில் மற்றும் தீக்குச்சி போன்றவற்றைத் தயாரிக்கலாம். இதன் பழங்களைப் பறவை, வௌவால், குரங்கு முதலியன உண்ணுகின்றன. இம்மரப்பட்டையைக் குடிநீர் செய்து தர, அதிசாரம், சீத பேதி, பெரும்பாடு முதலிய நோய்கள் நீங்கும். பட்டையை ஒரு நாள் காடியில் ஊற வைத்துக் கிடைத்த நீரால், புண்களைக் கழுவ அவை விரைவில் குணமாகும். இதன் மரப்பட்டை காய்ச்சலைக் குணமாக்குவதாக அறியப் படுகிறது. இப்பட்டை அசோக மரப் பட்டையுடன் கலப்படம் செய்து விற்கப் படுகிறது. —கோ. அர்ச்சுனன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 167)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kyrv2zy2/
தமிழ்“நெட்டிலிங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kyrv2zy2/APA
Oliyon Research. (2026). நெட்டிலிங்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kyrv2zy2/MLA
"நெட்டிலிங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kyrv2zy2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment