அரும்பைத் தொள்ளாயிரம்
arumpait toḷḷāyiram
விக்கிரம சோழனின் படைத்தலைவனாக விளங்கியதோடு, திருக்கோயிற் பணிகள் பலவற்றினை மிக்க ஈடுபாடு கொண்டு செய்த அரும்பாக்கம் மணவிற்கூத்தனான காலிங்கராயன் மீது பாடப் பெற்ற நூலாகக் கருதப்படுகிறது.
விக்கிரம சோழனின் படைத்தலைவனாக விளங்கியதோடு, திருக்கோயிற் பணிகள் பலவற்றினை மிக்க ஈடுபாடு கொண்டு செய்த அரும்பாக்கம் மணவிற்கூத்தனான காலிங்கராயன் மீது பாடப் பெற்ற நூலாகக் கருதப்படுகிறது. இவன் நரலோக வீரன் என்றும் அழைக்கப்பட்டான். இன்று இந்நூல் கிடைக்கவில்லை. அரும்பை என்பது அரும்பாக்கத்தைக் குறிப்பதாகும். இந்நூலின் பெயர் அரும்பகைத் தொள்ளாயிரம் என்னும் பாட வேறுபாட்டுடனும் காணப்படுகிறது. முத்தொள்ளாயிரம் என்பது போல இந்நூலும் செய்யுள் எண்ணால் பெயர் பெற்றது. இலக்கண விளக்கப் பாட்டியலின் உரையாசிரியர், எண்செய்யுளுக்கு எடுத்துக்காட்டாக இந்நூலையும் முத்தொள்ளாயிரத்தையும் காட்டியுள்ளார். இந்நூல், ஒட்டக்கூத்தரால் பாடப்பெற்றதாகக் கூறப்படுகிறது. கலைமகள் அருள் பெற்று ஒட்டக்கூத்தர் அரும்பைத் தொள்ளாயிரம் பாடுங்கால், அதன் ஒரு செய்யுளைக் கேட்டு, விக்கிரம சோழன் அதனை ஒட்டிப் பாடுமாறு வேண்டியதாகவும், அப்போது அவர் ‘நடித்தது நச்சரவு உச்சி’ எனத் தொடங்கும் செய்யுளைப் பாடியதாகவும் தமிழ் நாவலர் சரிதை கூறுகிறது. இந்நூல் தொள்ளாயிரம் பாடல்கள் கொண்டது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 824)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kxszuue9/
தமிழ்“அரும்பைத் தொள்ளாயிரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kxszuue9/APA
Oliyon Research. (2026). அரும்பைத் தொள்ளாயிரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kxszuue9/MLA
"அரும்பைத் தொள்ளாயிரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kxszuue9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment