வானூர்திக்கும் செயற்கையான தொடு கோட்டிற்கும் இடையே உள்ள தொடர்பை உணர்த்தும் ஒரு கருவியே செயற்கைத் தொடு கோடு (artificial tangent) எனப்படும். இக்கருவியில், செங்குத்து நிலையில் உள்ள சுழலி, பறப்பு நிலைக்கு ஏற்பத் தொடு கோட்டுத் தண்டை நகர்த்துகிறது. தொடு கோட்டுத் தண்டின் தொடக்க நிலை, வானூர்தியின் ஒரு நிலை காட்டி மூலம் குறிக்கப்படுகிறது. தொடு கோட்டுத் தண்டின் அசைவு, கருவியில் தேவையற்ற மாற்றங்களை உருவாக்கி, வானூர்தியின் நிலையைத் துல்லியமாகக் குறிக்கிறது. விமானி ஊர்தியில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளின் வழியே வெளியே பார்த்தால் தெரியக் கூடிய காட்சி இக்கருவியிலும் உருவாக்கப் படுகிறது. சுழலி, மின்சாரத்தாலோ, காற்று ஆற்றலாலோ இயக்கப்படலாம். காட்சியின் இயல்பைச் சிறப்பாக்கக் கருவியில் தொடு கோட்டுக்கு மேல் உள்ள பகுதி நீல நிறமாக வும், கோட்டிற்குக் கீழ் உள்ள பகுதி கறுப்பு, பச்சை அல்லது அரக்கு நிறமாகவும் தோன்றும் வண்ணம் அமைக்கப் படுகிறது. விமானத்திற்கான திரைத் தோற்றம் ஒரு நீளக் கோடு, அதன் கீழ் ஒரு சிறு கோடு, இரண்டிற்கும் இடையே சிறு புள்ளி என்றமைந்து உண்மையான விமானம் போலவே தோன்றும். கருவியில் தோன்றும் விமான நிலைக்கேற்ப தேவைப்படும் திருத்தங்கள், கருவியிலேயே ஆணைகளாகப் பொறிக்கப்படும். இக்கருவியின் துணை கொண்டு, பறப்பின் நிலை தொடர்ந்து அறுதியிடப் பட்டுத் தேவையான மாற்றம் நிகழ்த்தப்படும். —வயி. அண்ணாமலை நூலோதி. Harold A. Rothbart, Mechanical Design and Systems Handbook, McGraw-Hill Book Company, London, 1964. <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்த பக்கத்தில் ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->