குறுநில மன்னன், பிற்காலப் பல்லவர்குலத் தோன்றலான இவன், ‘கடல் ஆளப்பிறந்தான்’, ‘மோகனான காடவராயன்’, ‘நாலுதிக்கும் வென்றான்’ முதலான பெயர்களாலும் குறிக்கப் பெற்றுளான். இவன் காலத்தில் இராசராசச் சேதிராயன் என்பான் இரண்டாம் இராசராச சோழனின் வலிமைமிக்க குறுநில மன்னனாகத் திகழ்ந்தான். வலிமை மிக்க இவ்விரு சிற்றரசர்களிடையே திருமண உறவு ஏற்படுத்தி இருவரையும் ஒன்றுபடுத்த எண்ணினான் ஆகாரசூரனான காவலராயன் என்பான். எனவே, இராசராசக் காடவராயன் தன் மகளை இராசராசச் சேதிராயனுக்கு மணம் புரிவித்தான். மண உறவால் பிணைக்கப்பட்ட இவர்கள், இரண்டாம் இராசராச சோழனின் 16–ஆம் ஆண்டில் (கி.பி. 1162) தமக்குள் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றினைச் செய்து கொண்டனர். பகைவர்க்கு எதிராக இருவரும் ஒன்றுபட்டு ஒத்துழைப்பு நல்குவதென உடன்பாடாயிற்று. இதனைத் திருவெண்ணெய் நல்லூர்க் கல்லெட்டுக் குறிப்பிடுகிறது. இவன் மகள் அம்மச்சிகுடி உய்ய வந்தாள் போலும். ம.இரா.த.