இராம்கர்
irāmkar
இராசசுத்தான் மாநிலம் கோட்டா நகரிலிருந்து 67 கி.மீ.
இராசசுத்தான் மாநிலம் கோட்டா நகரிலிருந்து 67 கி.மீ. தொலைவிலமைந்துள்ள ஊர். இராம்கர் (Ramgarh) கட்டடக் கலைச் சிறப்புப் பெற்றது. இவ்வூரின் பழைமையான பெயர் சிரீநகரம் (Srinagara). இந்நகரத்தின் செல்வச் செழிப்பைக் குறிக்கும் வகையில் இப்பெயர் இந்நகருக்கு ஏற்பட்டது. இராம்கரை மேடா (Meda) என்னும் மரபினர். கி.பி. 7 அல்லது 10–ஆம் நூற்றாண்டில் ஆண்டு வந்தனர். இவர்கள் மேவா என்னும் பழங்குடியினரின் வழிவந்தவர்கள். இப்பழங்குடியினர் இன்றும் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். மேடா அரசர்கள் பல கோயில்களையும் கோட்டைகளையும இங்குக் கட்டினர். மலையவர்மன் என்ற மேடா அரசர் இந்நகரில் கோயிலொன்றைக் கட்டினார். இக்கோயில் இதே மரபைச் சார்ந்த திரிசாசவர்மனால் (Trisasavarma) கி.பி. 1162-இல் புதுப்பிக்கப்பட்டது. மலையவர்மன் தம் பகைவனை வென்றதன் நினைவாக இக்கோயிலைக் கட்டினார் எனக் கல்வெட்டொன்று குறிப்பிடு- கின்றது. இவர்கள் கட்டிய கோட்டை ஒன்று இன்று பாழடைந்து காணப்படுகிறது.
இந்நகரில் சமணக் கோயில்கள் பல உள்ளன. இது சமணர்களின் புண்ணியத்தலமாக விளங்கியிருத்தல் வேண்டும். இங்குள்ள கோயில்களிலேயே மிகப் பெரியதும் சிறப்புப் பெற்றதுமான கோயில் பாண்டதேவரா (Bhandadevara) என்னும் இந்துக் கோயிலாகும். இக்கோயில் கசுராகோவைப் (Khajurago) போன்ற சிற்பக் கலை நுட்பங்களைப் பெற்றுள்ளது. இது கருவறை, சபா மண்டபம், புகுமுக மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு நட்சத்திர வடிவ அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் சிகரம் திராவிடக் கலைப்பாணியைக் கொண்டுள்ளது. கோயிலின் அடிமுதல் முடிவரை உள்ள வெளிச் சுவர்ப் பகுதியில் பல்வேறு செதுக்குச் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மற்றொரு கோயில் திருமாலுக்குரியது. இக்கோயிலில் இரண்டு மனித உருவச் சிற்பங்கள் உள்ளன. இக்கோயிலின் கல்வெட்டின் மூலம் இம்மனித உருவங்கள் மேடா அரசர்களின் அதிகாரிகளான தண்டநாயகர் சோலங்கா (Dandanayaka Solanka), இராவுதா தாம்துகா (Rauta Damduka) என்பவர்களின் உருவங்களாகும் எனத் தெரிகிறது. இராம்கரிலுள்ள பிறிதொரு இந்துக் கோயில் கணபதி கோயிலாகும்.
இந்நகரத்தில் கி.பி. 9–ஆம் நூற்றாண்டு முதல் சமண சமயம் தழைத்தோங்கியது. இராம்கருக்கு அருகில் 5 கி.மீ. தொலைவில் காடுகளுக்கு இடையில் பல சமணக் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இங்குப் புலிகளும் சிங்கங்களும் மிகுதியாக உள்ளபடியால், இக்கோயில்கனை நெருங்குவது அவ்வளவு எளிதன்று. இராம்கரின் கட்டடச் சிற்பக்கலை கசுராகோ பரோலி கோயில்களுக்கு இணையானதாகக் கருதப்படுகிறது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 92)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kgppn26y/
தமிழ்“இராம்கர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kgppn26y/APA
Oliyon Research. (2026). இராம்கர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kgppn26y/MLA
"இராம்கர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kgppn26y/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment