செவியால் வரும் மூளைச் சீழ்க் கட்டி
ceviyāl varum mūḷaic cīḻk kaṭṭi
உட்செவியால் வரும் மூளைச் சீழ்க் கட்டி அடுத்துள்ள பொட்டுப் (temporal) பகுதியிலும், சிறு மூளையிலுமே காணப் படும்.
உட்செவியால் வரும் மூளைச் சீழ்க் கட்டி அடுத்துள்ள பொட்டுப் (temporal) பகுதியிலும், சிறு மூளையிலுமே காணப் படும். திடீரெனத் தோன்றும் உட்செவி அழற்சி பொதுவாக, மாஸ்ட்டாய்டு காற்றறை அழற்சியோடு காணப் படும், நாட்பட்ட மாஸ்ட்டாய்டு காற்றறை அழற்சியில், தொற்று காற்றறைகளில் தோன்றி, மூளைக்குக் குருதி மூலம் பரவும். கபாலத்தில் உள்ள இக்காற்றறை ஸ்பினாய்டு என்பின் மெல்லிய பகுதியை அரித்து, என்பு அழற்சியை உண்டாக்கி, மூளைக்கு நேரடியாகப் பரவலாம்.
மூளைச் சீழ் கட்டிகள் இரண்டு வகைப் படும். அவை மென்தோல் (piamater) அடிச் சீழ்க் கட்டி, மூளையடிச் சீழ்க் கட்டி என்பன.
மென்தோல் அடிச் சீழ்க் கட்டி. அடி வரை பரவிய சீழ் அழற்சியுடன் சிறு, சிறு சீழ்க் கட்டிகளையும் உண்டாக்குவதால், மூளை பெரிதும் பாதிக்கப் படுவதில்லை. இதனால், ஒருங்கிணைந்த நோய்க் குறிகள் காணப் படாமல், தோல் அழற்சிக்குரிய குறிகளே தெரியும். நெடுநாள் நுண்ணுயிர் எதிர் மருந்தை, ஊசி மற்றும் வாய் வழியாகக் கொடுத்து, தொற்றை முறிக்கலாம். எக்காரணங்கொண்டும், இடையே மருத்துவத்தை நிறுத்தக் கூடாது. நிறுத்தினால், விளைவுகள் கடுமையாக இருக்கும்.
மூளை அடிச் சீழ்க் கட்டி. செவித் தொற்று, மூளைத் தோலில் பரவி, சிலந்தி வலைத் தோல் போல் பரவி, மூளையின் அடியில் உள்ள வெள்ளைப் பகுதியில் (white matter) தங்கிச் சீழ்க் கட்டியை உருவாக்கும். இக்கட்டியில் மூன்று நிலைகள் உண்டு.
முதல் நிலைத் திடீர்ச் சீழ்க் கட்டி. இந்நிலையில், மூளை அழற்சியுடன், கீழறை அழற்சியும் காணப்படும். சில சமயங்களில், சீழ் கோத்துக் கட்டியாக மாறும்.
இரண்டாம் நிலைச் சீழ்க்கட்டி. மூன்று வாரங்களுக்குப் பின், உண்டாகும் கட்டிகளைச் சுற்றிக் கிளையல் சுவர் காணப் படும். நரம்புச் செல்களால் ஆன இச்சுவரின் ஒட்டுப் (cortex) பகுதியில், கனமாகவும். கீழே கீழறையை அடுத்து மெல்லிய சுவராகவும் காணப்படும். ஓரறை அல்லது பல அறைகளைக் கொண்ட இச்சீழ்க்கட்டியில் தொற்று உண்டாக்கக் கூடிய நோய் நுண்ணுயிரிகள் உயிருடன் காணப் படும். நாளடைவில், சுவரின் கனம் கூடிச் சீழில் உள்ள நுண்ணுயிரியை அழிக்கும். இருப்பினும், ஸ்டெஃபைலோ காக்கஸ் என்னும் நுண்ணுயிரி மட்டும் பல நாள் உயிருடன் இருக்கும் தன்மையுடையது. நாட்பட்ட கட்டியில் உள்ள சீழ் கெட்டிப் படுவதுடன், நோய் நுண்ணுயிரியற்றும் காணப் படும்.
மருத்துவம். உடனடியாக நுண்ணுயிர் எதிர் மருத்துவத்தைத் தொடங்கி, கட்டியின் வளர்ச்சியை சி.டி. துழாவுதல் மூலம் (CT Scan) ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட கபாலத்தில் துளையிட்டுச் சீழை வெளியேற்ற வேண்டும். நாட்பட்ட கட்டியை அறுவையால் சுவருடன் எடுக்கலாம். —மா.ஜெ.ஃபிரடெரிக் ஜோசப்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 910)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kg3ssz4m/
தமிழ்“செவியால் வரும் மூளைச் சீழ்க் கட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kg3ssz4m/APA
Oliyon Research. (2026). செவியால் வரும் மூளைச் சீழ்க் கட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kg3ssz4m/MLA
"செவியால் வரும் மூளைச் சீழ்க் கட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kg3ssz4m/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment