அம்மானை வரி
ammāṉai vari
அம்மானை வரி என்பது சிலப்பதிகாரக் காலத்திற்கும் முன்னரே இருந்து தமிழகத்தில் விளங்கிய இசைப்பாட்டு வகையாகும்.
அம்மானை வரி என்பது சிலப்பதிகாரக் காலத்திற்கும் முன்னரே இருந்து தமிழகத்தில் விளங்கிய இசைப்பாட்டு வகையாகும். அம்மானை என்னும் விளையாட்டினை மகளிர் விளையாடும் பொழுது அவர்கள் பாடிய பாட்டு—அம்மானை வரிப்பாட்டு. இப்பாடலின் ஈற்றடியில் “அம்மானை” என்னும் சொல் வரப்பெறும். இப்பாடல் — ஆடற்பாடல்; பண்ணுடன் கூடியது; தாளத்திற்குப் பொருந்தப் பாடப்படுவது. இதனைப் பாடும்பொழுது பாடலின் அடிகள் மடக்காகவும், வினாவை எழுப்புவனவாகவும், வினாவிற்கு விடை பகர்வனவாகவும் அமைக்கப்பட்டிருக்கும்.
அம்மானை வரிப்பாட்டு என்பது தெய்வத்தையோ மாந்தரையோ இயற்கையையோ புகழ்ந்து பாடப்படுவது. இது சிற்றூர் மகளிரின் ஆடல்வரிப் பாட்டு. அம்மானை அம்மனை அம்மானைவரி என்றும் வழங்கப்பெறும் (சிலப். 3:13) பல்வரிக்கூத்து); “அம்மனை பந்து, கழங்கு ஆடல் ஆலிக்கும் ...... கோத்தவரிக் கூத்தின் குலம்” என்று–சிலப்பதிகார மேற்கோள் கூறுவதாலும், “அம்மனை தங்கையிற் கொண்டங்கணியிழையார் தம்மனையில் பாடும் தகை” (சிலப். 29:19,) என்பதாலும் ‘அம்மனை’ என்பது ஒருவகை விளையாட்டிற்குரிய உருண்டைக் காய் என அறியலாகும்.
இனி, திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள திருவம்மானையில் அம்மானை என்னும் சொல் ஒவ்வொரு பாடலின் ஈற்று வரியில் மட்டும் “அம்மானாய்” என்னும் மாற்று வடிவுடன் இடம்பெற்றுள்ளது. எடு:– சிலப்பதிகாரத்தில் புகார்நகரைப் போற்றிப் பாடிய அம்மானை வரிப்பாடல் அமைப்பு வருமாறு:– ஒருபகுதி மகளிர் வினா:– புறவு நிறை புக்குப் பொன்னுலகம் ஏத்தக் குறைவில் உடம்பு அரிந்த கொற்றவன் யார் அம்மானை? மறுபகுதி மகளிர் விடை:– குறைவில் உடம்பு அரிந்த கொற்றவன் முன் வந்த கறவை முறைசெய்த காவலன்காண் அம்மானை: அனைத்து மகளிர் போற்றுதல்:– காவலன் பூம்புகார் பாடேலோர் அம்மானை.வீ.ப.கா.சு.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 440)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ka6xdd9g/
தமிழ்“அம்மானை வரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ka6xdd9g/APA
Oliyon Research. (2026). அம்மானை வரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ka6xdd9g/MLA
"அம்மானை வரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ka6xdd9g/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment