அட்லாண்டிக்குப் பெருங்கடலில் சிப்ரால்டர் நீர்ப்பிரிவிற்கு மேற்கில் இருந்ததாகக் கிரேக்கர்களும் உரோமானியர்களும் நம்பி வந்த தொன்மையான தீவு, பிளேட்டோ (Plato) என்னும் கிரேக்க அறிஞர் பழங்காலத்தில் இங்கு ஒரு பேரரசு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பிற்காலத்தில் நில நடுக்கத்தாலும் பெரு வெள்ளத்தாலும் இத்தீவு அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. இப்பொழுதுள்ள கானரித் தீவே (Canary Islands) அக்கால அட்லாண்டிசு (Atlantis) எனச் சிலர் கூறுவர். அட்லாசு மலையை வைத்தே இத்தீவிற்கு அட்லாண்டிசு எனப்பெயர் ஏற்பட்டது என்று நம்பப்படுகிறது.